உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துடிக்கும் இளமை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கொதிப்பேறுவதற்குக் காரணம் ஒன்றல்ல! இரண்டல்ல!! ஓராயிரமுண்டு!!! கால் கண்ணில்லாதவனுக்குக் காதாவது கேட்க வேண்டும். அது போகட்டுமென்றால் பேசவாவது இயல்பிருக்கவேண்டும். அதுவுமில்லையென்றால் கைகளாவது சரியாக இருக்கவேண்டும். அதுவுங் கிடையாது. இதே நிலைதான் திராவிடர் வாழ்விலும் அமைந்துள்ளது. வாழ்விலே சமத் துவ முண்டா? வள்ளுவரும், வடலூராரும், புத்த ரும், சித்தரும் சமத்துவத்தைப் பரப்பியதிலிருந் தும், அதுவே நமக்குத் தேவையும் அவசியமும் அவசரமுமானதாகத் தெரிவதிலிருந்தும் சமத்துவ உணர்ச்சிக்கு சாவுமணி அடிப்பவர்களைக் கண் சீற்றமடையாதிருக்க முடியுமா? அரிச்சுவடிப் புத்தகத்திலே ஆரியனை அய்யர் என்றும், அல்லும் பகலும் உழைத்து வாடும் திராவிடரை, உழவன், தட்டான், தச்சன் என்றும் எழுதப்படுகிற துணி வைக் கண்டு துள்ளுகிறான் மானமுள்ளவன் ! இதைத் தடுக்க முடியுமா? சமத்துவத்தைப் பரப் பும் நோக்குடன் எத்தனை நூல்கள் திராவிடருக்கு வேதமாக்கப்பட்டுள்ளன ? ? பிராமணனோடு சூத் திரன் உட்கார்ந்தால் சூத்திரனது பின்பாகத்தை அறுத்தெறிய வேண்டுமென்ற அறிவுரை புகலும் மனுநீதி! சம்பூகளை என்பவன் தவம் செய்ததற் சூத்திரன்! தவமியற்றுவதா?' காக எனச் சினந்து அவன் தலையைக் கொய்த இராமனது கருணை வரலாறான வரலாறான இராமாயணம்! அக்கினியில்