உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 47 கொடுக்கிறான். அவள் கண்கள் களிப்பு மிகுதியால் கடல்களாகின்றன. அடுக்களை அமர்க்களப்படுகிறது! பட்ட மங்கலத்தார் விருந்து சாப்பிடப் சாப்பிடப் போகிறார்கள் என்பதற்காகவா? கல்யாணி நாச்சியாரும் அவளுக்கு உதவியாக வாளுக்கு வேலியும் சமையற்கூடத்தில் உள்ள பண்ட பாத்திரங்களை உருட்டும்போது அங்குள்ள சமையற்காரன் காடைக்கும் சமையற்காரி கௌதாரிக்கும் கால் ஓடுமா? கை ஓடுமா? மற்ற ஊழியர்கள் கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா? 'கல்யாணி / முயல் கறி நன்றாக வெந்துவிட்டது? இதற்கு மேல் இருந்தால் கருகிவிடும்! இறக்கிவிடம்மா!" 'அண்ணா! இதோ இறக்கிவிடுகிறேன்! ஏ அப்பா! பெரிய சட்டி! சூடு வேறு தாங்க முடியவில்லை!" 'இரு! இரு! நான் இறக்கி வைக்கிறேன்!.. "தங்கச்சி! ஆட்டுக்கால் சூப்புக்கு எலுமிச்சம் பழம் பிழிய மறந்துடாதே!" "மறப்பேனா? வைத்திருக்கிறேனே!" இதோ பழங்கள் தயாரா பழங்களை வேகவேகமாக அறுக்கிறாள். "ஆ!" அவள் விரல் நுனியில் கத்தி வெட்டிவிடுகிறது! இரத்தம் கசிகிறது! வாளுக்கு வேலியின் கண்ணில் இரத்தம் கொட்ட ஓடி வருகிறான்! துடித்துப் போகிறான்! கல்யாணியின் காயம் பட்ட விரலைத் தனது வாய்க்குள் வைத்து, கசியும் இரத்தத்தை உறிஞ்சி விட்டுத் தனது வேட்டியின் நுனிப்பாகத்தைக் கிழித்து அவள் விரலில் சுற்றி விடுகிறான். மிகப் பெரும் ஆரவாரத்திற்கிடையே அடுக்களையில் விருந்துப் பண்டங்களாக மாறிய மான்களும், முயல்களும், ஆடுகளும். கோழி முதலிய பறவையினங்களும் வெள்ளித்