உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 "மண்டிலங்கள் பலவற்றைப் பறித்துக் கொண்டார்கள்! இன்னமும் பறித்துக் கொண்டே வருகிறார்கள். அதற்கும் மேலே ஒரு படி ஏறி நமது மங்கையரின் மானத்தையும் பறித்திடுகின்ற கோர விளையாட்டில் வெள்ளைக்காரத் துரைமார்கள் ஈடுபடுவார்கள் என்றால் அதைப் பொறுத்துக் கொண்டு வாழ்வதைவிடச் சாவது எவ்வளவோ மேலானது அண்ணா"" என்ன தம்பி செய்வது? அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டைபோலச் சிதறிக் கிடக்கும் குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளவும் காட்டிக் கொடுக்கவுமான செயல்களுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டுவிட்ட பிறகு திறந்து விட்ட மனையாகி விட்டது தென்பாண்டிச் சீமை! நூற்றுக்கணக்கானதும் ஆயிரக்கணக் கானதுமான சதுரக் கற்கள் பரப்பளவில் எல்வைகளை வகுத்துக் கொண்டு ஆட்சி நடத்திய அரசர்களே இன்றைக்கு ஆங்கிலேயர்களின் அடிமைகளாகிவிட்ட பிறகு இருபது முப்பது கிராமங்களை உள்ளடக்கிய நமது அம்பலக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் நாடுகள் எம்மாத்திரம்?" “ஆட்சி, அதிகாரம் இவைகள் போனது பற்றியோ அல்லது இனியும் போகப் போவது பற்றியோ நான்