உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கலைஞர் மு. கருணாநிதி கல்யாணி நாச்சியாருக்கு நடனக் கலை ஆர்வம் எப்படியிருக்கிறதாம்? வடிவாம்பாள் எதுவும் சொல்ல வில்லையா?" இந்தக் கேள்விக்கு வலிதாங்கியும் நாதமுனியும் போட்டி போட்டுக் கொண்டு பதில் சொன்னார்கள். "எடுத்த எடுப்பிலேயே அபாரமா ஆடுறாங்க! "அஸ்திவாரம் பலமா இருக்கிறதாலே சொல்லிக் கொடுக்கிறதை உடனே புடிச்சிக்கிறாங்க!" விமர்சனங்களைக் கேட்டு வாளுக்குவேலி நிறைந்த மகிழ்ச்சியுடன், வெற்றிலைத் தட்டிலிருந்து பாக்கை எடுத்து மென்றுகொண்டே வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிட முனைந்தான். அதற்குள் சுந்தரி அருகே வந்து அவன் கையில் இருந்த வெற்றிலையை வாங்கி அவளே சுண்ணாம்பு தடவி மடித்துக் கொடுத்தாள். அவள் மடித்துக் கொடுக்கும் எழிலும், அவன் அதை வாங்கிச் சுவைக்கும் எழிலும் நாதமுனியையும் லலிதாங்கியையும் கடைக்கண்களால் பேசிக் கொள்ளச் செய்தது. இருவரும் அங்கிருந்து மெல்ல நகர்ந்தனர். அவர்கள் நழுவிச் செல்வதைச் சுந்தரி கவனிக்காதது போல வாளுக்குவேலிக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தபடியே இருந்தாள். எத்தனை வெற்றிலைகள் மடித்துக் கொடுத்தாள் என்று அவளுக்கும் நினை வில்லை. அவனுக்கும் நினைவில்லை. ஆனால் எவ்வளவு சுண்ணாம்பை அளவின்றித் தடவி விட்டாள் என்பது அவன் வாய் நிறைந்து வெந்துபோனதும் தான் தெரிந்தது/ வாய் வெந்து போனதைக் காட்டிக் கொள்ளாமலே சமாளித்தான். தனது தவற்றைப் புரிந்து கொண்ட சுந்தரி, உடனே விரைந்தோடிச் சென்று தாம்பூலப் படிகத்தை எடுத்து வந்து