உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 221 ஆதப்பனும், வாளுக்கு வேலியும் மாறி மாறிப் பேசிக்கொண்டிருப்பதைக் கல்யாணி விரும்பவில்லை. "அண்ணா! என் பிரச்சினையை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்." அப்படிச் சொன்னாளே தவிர, அவளது உள்ளக் குமுறவை அவளால் மறைத்துக் கொள்ள முடியவில்லை! வாளுக்குவேலி சிறிது நேரம் அசைவற்று நின்றான். "என் முடிவுக்கே விட்டு விடுகிறாய் அல்லவா?" என்று நிதானமாகக் கேட்டான்! கல்யாணி தலை நிமிரவில்லை. "என் .முடிவு யாரும் மாற்ற முடியாத முடிவு! வைரமுத்தன்தான் கல்யாணிக்கு ஏற்ற வரன்!" இப்படி அறிவித்தவன் அய்யரிடம் கேட்டான்: இதற்கு வைரமூத்தன் சம்மதம் வேண்டாமா?" என்று! 康康康