உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கலைஞர் மு. கருணாநிதி அவனிடம் கேட்டாள்: "நீண்ட நாள் விரோதமாயிற்றே நெருப்பும் நீரும் போவ இரண்டு குடும்பங்களுக்கும் ஒத்து வருமா?” என்று. அதற்கு வாளுக்கு வேலி சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்! 'நீரின் இயல்பு நெருப்பை அணைப்பதுதானே! தெடுநாளைய பகைத் தீ அணையவும் கூடுமல்லவா? அதனால்தான் கல்யாணியின் விருப்பத்திற்கு நான் கடுமை யான எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை! அது மட்டுமல்ல; நீயும் எவ்வளவு நாளைக்குக் காத்திருப்பாய்?" சுந்தராம்பாளை வெட்கம் முற்றுகையிட்டது! தலையைக் குனிந்து கொண்டே அவனிடம் கேட்டாள்: "உங்களுக்கு மட்டும் என்னவாம்! எனக்கு மட்டுந்தானா?" என்று! வாளுக்கு வேலி, அவள் தலை கவிழ்ந்து நாணத் துடன் பேசுவதிலும் கூட ஒரு கலையழகு மிளிர்வதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். சுந்தராம்பான் சற்றுத் துணிவு பெற்றவளாய் அவனது கரங்களைப் பற்றிக் கொண்டு சொன்னாள்: ஒன்று மட்டும். நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் என்னிடம் கொண்டுள்ள அன்பைச் சுமந்து கொண்டு என் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்து விடுவதற்கும் நான் தயார்" அவளது தூய்மையான நெஞ்சத்திற்கு அடிமையாகி விட்ட நிலையில் "சுந்தர்!" என்று கண்கள் பனிக்க அவள் முகத்தைத் தனது மார்பில் பதித்துக் கொண்டான் வாளுக்கு வேலி பாகனேரியும் பட்டமங்கலமும் விழாக்கோலம் பூண்டன. இருநாட்டு ஆலயங்களிலும் விசேச பூஜைகள் நடத்தப்பட்டன. தஞ்சாவூர்க் கீற்று வேலைக்காரர்களால் வண்ண வண்ண முகப்புகள் அமைந்த பந்தல்கள்,