உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 என்னதான் தனது மன வேதனையை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கல்யாணி நாச்சியார் மறைக்க முயற்சி செய்தாலும் கூட வீரம்மாளுக்கு எல்லாமே நன்கு விளங்கி விட்டது. முதல் இரவு நாளன்று வைரமுத்தன் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டான் என்பதும், வடிவாம்பாள் இரவோடு இரவாக வெளியேறியதும். அவள் காதுகளுக்கு வராமல் போய்விடவில்லை. தனது சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கல்யாணியை அணுகி விசாரித்தாள். ஆனால் அவள் தன் கணவனைப் பற்றி எந்தக் குறையும் சொல்லவில்லை. அவனோடு ஒவ்வொரு இரவும் மகிழ்ச்சியாகக் கழிப்பதாகவே கல்யாணி வீரம்மாளிடம் கூறினாள். வடிவாம்பாள் விவகாரம் பற்றித் தெரிந்து கொள்ள வீரம்மாள் அக்கறையெடுத்துக் கொண்டாள். '"அய்யோ! அப்படியெல்லாம் அவர் மீது பழி சொல்லாதீர்கள்! அன்றிரவு முழுதும் அவரும் நானும் எவ்வளவோ மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் என் அருகிலேயே இருந்தார். வடிவாம்பாள் எங்கிருந்தாள் என்பதுகூட அவருக்குத் தெரியாது. அப்படியொரு எண்ணம் அவருக்கு இருந்ததாகச் சொல்வதே மகாபாதகம்! யார்தான் இப்படியொரு கதையை இட்டுக் கட்டி உங்களிடம் சொல்லியிருக்கிறார்களோ?"