உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 கலைஞர் மு. கருணாநிதி நினைவிலே வைத்துக் கொள்! வீரம்மா! விடிய விடிய விரோதிக்குத் துணை புரிந்து அவனை இங்கிருந்து தப்பியோடுவதற்கு வழி வகுத்து நீயும், உன் உதவியால் இரவு முழுதும் உன் தம்பியோடு உல்லாசத்தில் திளைத்திருக்கும் கல்யாணியும் காலையில் அருமை யான காட்சியைக் காணத் தயாராகிக் கொள்ளுங்கள்! புரவியெடுப்பு விழாவுக்கு உடுத்துவது போலப் புதுப் புடவைகளை உடுத்திக்கொண்டு, பொட்டிட்டுப் பூ முடித்துப் புன்னகை ததும்பிட வாருங்கள்! பரமானந்தக் காட்சியைப் பாருங்கள்!! வீரம்மாளின் பொறுமை சோதனைக்கு உள்ளா கியது! அவளது ஆத்திரத்தைத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அடக்கிக் கொண்டாள். ஆயினும் சொல்ல வேண்டுமென்று நினைத்ததைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 'பழிக்குப் பழியல்ல உங்கள் குறிக்கோள்! பாகனேரி-பட்டமங்கலம் இரண்டையும் மோதவிட்டு அந்தப் பரங்கியருக்கு வேலையைச் சுலபமாக்குவதே உங்கள் இலட்சியம்! பாவம், பட்டமங்கலத்து அம்ப லக்காரர் பட்டம் உங்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கிறது அல்லவா?ய ஒரு பசுவின்மீது வேங்கை பாய்வதுபோல அவன் பயங்கரமாகக் கத்தினான். உடைவாளை எடுத்துக் கொண்டான். வீரம்மாளை எரித்து விடுவது போலப் பார்த்தான். மளமளவென அங்கிருந்து நடந்தான். வீரம்மாள் நின்று கொண்டே அழுதாள். பிறகு படுக்கையில் வீழ்ந்தாள். நன்றாக விடிந்து விட்டதைக் கண்டு திடுக்கிட்ட கல்யாணி, ஆடைகளை அள்ளி மேலே போட்டுக் கொண்டு, அவசர அவசரமாக எழுந்து, அனுபவித்த