உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 345 ஒரு வார்த்தை என்னிடம் தங்கச்சி ஆயிற்றே என்று கேட்டாயா?" வடிவு வெடுக்கென்று பதில் கூறிவிட்டு அதிருக்கட்டும், ஆசீர்வாதம் செய்! இந்தா குங்குமம்; பொட்டு வை!" என்று அங்கே மாடத்திலிருந்த குங்குமச் சிமிழை எடுத்து வந்து சுந்தரியின் கையில் கொடுத்தாள். சுந்தரியும், குங்குமத்தைத் தங்கையின் நெற்றியில் வைத்துக் கொண்டே, 'உம், இப்போதாவது சொல்! யார் அது?" என்று ஆவல் ததும்பக் கேட்டாள்! "பட்டமங்கலத்து அம்பலக்காரர் வைரமுத்தன்!" என்று வடிவு பூரிப்போடு கூறிவிட்டுச் சுந்தரியின் முகத்தை நோக்கியபோது, சுந்தரியின் முகம் திடீரெனக் கறுத்துப் போய் விட்டதை உண்ர்ந்தாள். சுந்தரி, பெருமூச்சு விட்டவாறு, ஊஞ்சலில் போய் உட்சார்ந்தாள். "ஏனக்கா உன் முகம் இப்படி ஆகிவிட்டது? அவருக் கென்ன அழகில்லையா? அந்தஸ்து இல்லையா? பாகனேரி நாடு போல அவரும் பட்டமங்கலம் நாட்டுக்குத் தலைவரக்கா!" "எல்லாம் சரி வடிவு! அவர் கல்யாணியின் கணவர்! கல்யாணியின் வாழ்க்கையைப் பற்றிக் கடுகளவாவது நினைத்துப் பார்த்திருந்தால் நீ இந்த முடிவுக்கு வருவாயா?" 'அதை நினைத்துப் பார்க்க வேண்டியது. அவர் எனக்கென்ன கல்யாணியைப் தானக்கா? கவலை பற்றிக் 'கவலையிருக்க வேண்டுமடி உனக்கு! ஒரு வகையில் உனக்கு மாணவிகூட கல்யாணி! அதுதான் போகட்டும்; கல்யாணியின் அண்ணன் வாளுக்குவேலித் தேவர் எனக்குக் கணவர்! நீ கல்யாணியின் கணவருக்கு மனைவி என்றால், ஏதாவது ஒழுங்கான உறவு முறை