உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 கலைஞர் மு. கருணாநிதி அய்யோ, அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்று கல்யாணியும். சுந்தரியும் அவன் பாதங்களில் மீண்டும் வீழ்ந்து கதறினார்கள். இருவரையும் இருகரம் பற்றித் தூக்கி நிறுத்தினான். கல்யாணியின் உச்சந்தலையைத் தனது உதட்டருகே கொண்டுவந்து முத்தமிட்டான்! அப்போது அவன் கனல் சுக்கும் கண்களிலே புனல் பெருகிற்று! ""சுந்தரி!” என்றான், அதற்குள் கல்யாணி மாடத்தில் உள்ள குங்குமச் சிமிழை எடுக்கப் போனாள்; அவனுக்குத் திலகமிடா அவள் திரும்புவதற்குள் சுந்தரியின் கன்னத்திலே ஒரு முத்தம் பதித்தான். சுந்தரி உணர்ச்சிப் பிழம்பாக நின்றாள். கல்யாணி அவன் நெற்றியிலே திலகமிட்டாள்! சிமிழைச் சுந்தரியிடம் கொடுத்தாள். சுந்தரியும் தனது அன்புக் காதலனின் நெற்றியில் வீரத் திலகமிட்டாள்!.... வெளியே பாகனேரிப் படையும், பட்டமங்கலத்துப் படையும் மோதிக் கொள்கிற பேரொலி கேட்டது! வாளை உருவினான் வாளுக்குவேலி!... அந்த வாளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு உருவிய அந்த வாளுடன் அங்கிருந்து வெளியேறினான். 母