உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நச்சுக் கோப்பை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநீத ஏகா: ஆமாம்! சூது செய்பவன் கூடத்தான் சாது எனப் பெயர் வாங்குகிறான்! ஆதி: அதிகமாய்ப் பேசவேண்டாம் - அதிகப் பிரசங்கி நாயே! ஏகா: அறிவோடு பேசுங்கள் அப்பா. ஆதி: அறிவாவது! சிறிவாவது! அடிச்சேன்னா, பல் கில்லு எல்லாம் உடைஞ்சுடும். பாதக ஏகா: அப்பா! ஏன் அடிக்க மாட்டீர்கள். இனி நான் உங்களிடம் பேசத் தயாராயில்லை. பகல் முழுதும் உழைத்து அலுத்த பாட்டாளியின் மனைவி பாம்பு கடித்திருக்கும் சம வம்,பட்ட கடனைத் தீர்ப்பாய் என்று பார்ப்பான் வந்தது போலவும், கப்பல் மூழ்கிய காரணத்தால் கரையை அடைய கடலில் நீந்தும்போது மகா மீன் வாய் பிளந்து வரவேற் பது போலவும் வேதனையிலே வாடும் என்னிடம் மாக நீர் பேசுகிறீர். தந்தையே! கட்டக் கந்தையுமில்லையே என்று கதறும் கபோதியிடம் விந்தை மொழி பேசுவரோ? என் செய்வது! போரின் புகைச்சல் நம் ஊரை அணுகும் வேளையில், யுத்த வாடை இந்தியக் கரையை மோதும் நேரத்தில் நாச வேலையை நடாத்திய நேசர்களின் தொண் டர் அல்லவா தாங்கள்! ஏன் பேசமாட்டீர்கள்? இன்னமும் பேசுவீர்கள். ஆதி: அடே, சொர்ணை கெட்டவனே! உன்னைப்பெத்து வளர்த்து போதித்து, சோறு போட்டு, இந்தத் தசையை வளர்த்த என்னிடம் இப்படித்தான் பேசவேண்டும். விதி மற்ற வீணனுக்கு வீராப்பு வேறு. உன்னை எவ்வளவோ மரியாதையாக நடத்தணும்னு நினைச்சேண்டா நீயே கெடுத் துக்கிட்டே. இப்பப் பேசக் கத்துக்கிட்டு மூச்சு விடாமெ பேசுறே. போடா, மடப்பய மகனே! (உள்ளே போதல்) 19