உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது கோரிக்கை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.. தன் 7 ஆனால், பிரதமர் திருமதி இந்திரா காந்தி மட்டுமே பாராட் டப்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. இரவீந்திரநாத் டாகூர் அவர்கள் குறிப்பிட்ட பொன்மொழியை எடுத்துக்காட்டி, 'இழிக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்து மக்கள் தங்கள் மானத்தை நிலைநாட்டியுள்ளது மட்டுமின்றி, தங்கள் நாணயத்தையும் காப்பாற்றி ஜனநாயக அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளனர்' எனக் கூறிக்கொள்வதில் பெருமைப்படலாம் என்று ஆளுநர் அவர்கள் குறிப் பிட்டிருக்கிறார்கள். நாம் அடுத்தபடியாக, இந்தியாவில் புகலடைய வேண்டி வந்தது. இலட்சக்கணக்கான மக்கள் அவதியால் அல்ல லுற்று ஓடிவந்தபோது என் அஞ்சேல் அவர்களுக்குத் தஞ்சமளித்துக் காப்பாற்றுவதற்கு இந்த நாடு முழுவதும் ஓரணியாகத் திரண்டு நின்றது என்று நாட்டு மக்கள் ஓரணியாகத் திரண்டதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். " சுமை அடுத்து, 'இந்திய மக்கள் அனைவரும் மனமார்ந்த ஒத்துழைப்பு நல்கியிராவிட்டால் நமக்கு ஏற்பட்ட யினைத் தாங்க ஆதாரங்கள் அனைத்தையும் திரட்ட முடி யாமற் போயிருக்கும் என் இந்திய மக்களைத் தன் உரையிலே பாராட்டியிருக்கிறார்கள். அந்த உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுகின்ற அடிப்படையிலே எழுந்த விவாதத்திற்குப் பதில் அளிக்கும் இந்த நேரத்தில் நானும் மீண்டும் ஒரு முறை தமிழ் நாட்டின் சார்பாக இந்தப் போரின் வெற்றிக்கு முழு முதல் காரணமாயிருந்த முப்படைத் தளபதிகளையும், வீரர்களையும், இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களையும், பாதுகாப்பு அமைச்சர் திரு ஜகஜீவன்ராம் அவர்களையும், இந்த வெற்றிக்கு ஈடு கொடுக்கின்ற அளவில் ஓரணியிலே நின்ற நம்முடைய நாட்டு மக்கள் அனைவரையும் மீண்டும் முறை பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்ளுவதிலே நான் மிகுந்த பெருமை அடைகிறேன். வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டுப் போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகள் உடனடியாகச் சென்று சேரவில்லை என்ற கருத்து இங்கே பேசிய சில உறுப்பினர் களால் இரண்டொரு நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. ே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தப் போரில் மாண்ட வீரர்களின் எண்ணிக்கை இதுவரையிலே கிடைத்த ஒரு கணக்கின்படி 98 பேராகும். 98 பேரோடு இந் கணக்கு நின்றுவிடுமா என்றால் நிற்காது; அதனால்தான் இது வரையிலே கிடை த்த கணக்கின்படி என்று தான் குறிப் பிட்டேன். அந்த 98 பேரில் 61 பேரின் குடும்பங்களுக்குக் குடும்பத்திற்கு 5,000 ரூபாய் வீதம் தமிழக அரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_கோரிக்கை.pdf/8&oldid=1705269" இலிருந்து மீள்விக்கப்பட்டது