உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எடுத்தாலும் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக் கிறோம் என்று தெரிவித்தார்கள். மேலவை எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் இந்த அரசின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக அப்படிப்பட்ட அப்படிப்பட்ட உறுதியைத் தெரிவித்தார்கள் என்று கருதுகிறேன். வன்முறைச் செயலில் நாட்டம் கொண்டவர்கள் அமைச் சரவையில் இருப்பார்கள் என்றால் அந்த வார்த்தையை அவர்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். . அவர்கள் கள்ளம் கபடமின்றி, வெள்ளை உள்ளத்தோடு இப்படிக் கூறக் காரணம், எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் நிதானத்தோடு, நேர்மையோடு, நாடாளுமன்ற முறைப்படி இருக்கும் ; அண்ணா அவர்களின் பாதையில் தான் அந்த நடவடிக்கை இருக்கும் என்று அவர்கள் நம்பியதால் தான் இவ்வளவு அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்கள். நான்கூட அவருடைய இந்தப் பேச்சைக் கேட்டு அவருடைய கட்சிக் காரர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்தேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் அவர்கள் கொண்டிருக் கிற இந்த ஆர்வத்தைப் பாராட்டப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன். நமக்கு வந்து சேர வேண்டிய நிதிநிலைக் கூறுகள் வந்து சேராததற்கானகாரணங்கள் என்னென்ன என்பதையெல்லாம் உறுப்பினர் திரு. சாமிநாதன் ஆராய்ந்தார். மத்திய அரசின் தூதுவர் ஒருவர் பேசுகிறாரோ என்று எண்ணக் கூடிய அளவிற்கு அவருடைய பேச்சு போய்விடுமோ என்று கூட எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் பேச்சை முடித்த பிறகுதான் பரவாயில்லை, தமிழக அரசு, மத்திய அரசிற்கு எதிராக நடத்துகின்ற அறப் போராட்டத்திற்கு - உரிமைப் போராட்டத்திற்கு-பாராளுமன்ற முறைக்கேற்ற போராட் டத்திற்குத் திரு. சாமிநாதன் அவர்களும், நிச்சயமாக நம்மோடு இருப்பார் என்ற துணிவினைப் பெற்றேன். இந்த அரசு ஒன்றுதான் மத்திய அரசோடு வீரமாக எதிர்த்துக் குரலை எழுப்பக்கூடிய அரசு என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழ்நாட்டின் பண்பாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நீண்ட காலம் பணி யாற்றிய பெரியவர் திரு. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களும் மேலவையில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் பேசிய நேரத்தில், குடும்பத்திலுள்ள ஒரு பெரியவர் வாழ்த்துவது போன்ற உணர்ச்சியையும், உள்ள உணர்வையு ம் பெற்றேன். தேர்தலுக்கு முன்பு அவர்கள் தங்களுடைய நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/54&oldid=1705369" இலிருந்து மீள்விக்கப்பட்டது