உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய கொக்குக்குளி எக்ஸிபிஷன்' அண்ணாமலைக்குச் சுவைக்கவில்லை. ஏனெனில் அன்று அழகிகள் வர வில்லை. எழிலரசிகளின் அதரங்களிலே தவழும் புன்னகையிலே பூரிப்புப் பெறுபவன். அண்ணாமலை அழகற்றப் பெண்கள் இந்த உலகத்தில் வாழ லாயக் கற்றவர்கள் என்பது அவனது அவனது கொள்கை. பிரம்மா சரசாவுடன் இன்பப் பொழுது போக்கிக் கொண்டி ருந்தபோது தனது படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டுமே யென்ற எரிச்சலோடு சில மாமிசப் பிண் டங்களைப் படைத்தானாம். அவர்கள்தான் அழகற்றப் பெண்களுக்கு இந்த உலகத்தில் தொல்லை கொடுப் பவர்களென்று அண்ணாமலை அடிக்கடி சொல்லுவான். அவனுக்கு வாழ்வு ஒரு பூஞ்சோலை ; அதில் பறந்து திரியும் கிள்ளைகள்தான் பெண்கள்! "சே! என்ன எக்ஸிபிஷன் இது ! அழகிகளில்லாத 'எக்ஸிபிஷன்' குஷ்டரோகம் பிடித்த 'ஜூலியட்டுக் குத்தான் சமம். ரோமியோகூட அவளைத் தீண்ட மாட்டானே இந்த உலகிலேயே அழகானவன் தமிழன் என்கிறார்களே ! ஒரு அழகான தமிழச்சியை இங்கே காணமுடியவில்லையே.... என்றெல்லாம் முனகிக் கொண்டிருந்தான் அண்ணாமலை. வளையல் கடைகளை 3 -