உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொத்துக் கிளி யும், ரிப்பன் கடைகளையும் வலை போட்டுத் தேடினான். சேல் கெண்டைக்கு வலைபோட்டான், வரால் குஞ்சுகள் தான் சிக்கின ! அங்கே காணப்பட்ட பெண்கள் தாங் கள் எவ்வளவு விகாரமாய் இருக்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. ஆனால் அழகான வளையல் களைப் பொருக்குவதில் மட்டுமென்னமோ தயங்கவில்லை! உலகமே அப்படித்தானே ! தான் அழகாயில்லை என் பதற்காக குயில் பாடாமலிருந்தால்....அழகாயிருக்கிறோம் என்பதற்காக மயில் கானம் இசைக்கத் துவங்கினால்.... இயற்கையே மாறியிருக்குமே ! துவண்ட உள்ளத்தோடு சுற்றிக்கொண்டிருந்தான், அண்ணாமலை. 'களுக்' என்று சப்தம் கேட்டுத் திரும் பினான். ஆம்... சேல் கெண்டையே சிக்கிவிட்டது. அவளுடைய அலையும் விழிகளிலே அவன் அற்புதத்தைக் கண்டான். தன் புருவ வில்லினால் அண்ணாமலையை அக்கக்காகக் குத்திக் கொன்றுவிட்டாள். அந்த மாதுளை மலர் போன்ற அதரங்கள் அண்ணாமலையின் உள்ளத் திலே உணர்ச்சிப் புயலைத் தூண்டிவிட்டன. கண்டாரைக் கவரும் அவள் அண்ணாமலையையா விட்டு வைப்பாள் ? அண்ணாமலையை மட்டுமென்ன அவன் போன்ற மற்ற ஆண்களையும்தான் அவள் தன் புன்சிரிப்பினால் கவர்ந்தாள். அண்ணாமலை ஒவ்வொரு திக்கிலும் சென்று, ஒவ்வொரு கோணத்திலும் அவளை ரசித்தான். ஆனால் அந்தப் "பூங்கோதை" அந்த வளையல் கடையை வீட்டு அசையவில்லையே ! அழகியாயிருந்தாலென்ன, கல்லூரி மாணவியாயிருந்தாலென்ன, கம்பனின் சூர்ப்பனகையாயிருந்தாலென்ன, அவர்கள், அனைவரை