உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டோர் 47 பேர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம், பூஜ்யங்களே பூஜியமாக ஆக்கப்பட்டவர்களே! தலைச்சுழி ஒழுங்காக இல்லாத காரணத்தால் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சுழியாக ஆகிவிட்டவர்களே! ஏமாற்றப்பட்ட சமுதாயமே! உன்னைக் கேட்கிறேன். மண்டல் கமிஷன் தேவையா இல்லையா? (தேவை ! தேவை ! என மக்கள் குரல்). பொருளாதார அடிப்படை என்ற கூச்சலுக்கு நேருவின் பதில்! இட மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து பொருளாதாரத் துறையில் - பொருளாதார பொருளாதார அடிப்படையில்தான் இந்த ஒதுக்கீடுகள் தேவை என்று சிலபேர் வாதிடுகிறார்கள். அவர் களுக்கு நான் அல்ல அரசியல் சட்டத்திலே முதல் திருத்தத்தை கொண்டுவந்தபோது பண்டித நேரு பதிலளித்திருக்கிறார் என்ன பதில் தெரியுமா? "பொருளாதார நிலை என்பது நிரந்தரமானது அல்ல. ஒருவன் இந்த ஆண்டு பணக்காரனாக இருப்பான். அடுத்த ஆண்டு வருமானம் இல்லாமல் போய்விடும். அதற்கு அடுத்த ஆண்டு வருமானம் வரக்கூடும். எனவே பொருளாதார அடிப்படை என்று அமையக்கூடாது" என்று நான் அல்ல, பண்டித நேரு அவர்கள், இங்கே தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடிய நேரத்தில் உயர்நீதி மன்றத்திலே - உச்சநீதி மன்றத்திலே வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கை அடிப்பட்டுப்போன நேரத்தில், வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும், என்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு பெரியாரும், அண்ணாவும் களத்தில் நின்ற அந்தக் கால கட்டத்தில் பண்டித நேரு தமிழகத்திலே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த அரசியல் சட்ட திருத்தம் தேவை என்று அரசியல் சட்ட திருத்தத்திற்கு முதல் சட்டதிருத்தம் கொண்டு வந்தாரே அப்போது பொருளாதார அடிப்படையில் இதைக் கவனியுங்கள் என்று பலரும் கூச்சல் போட்டபோது அளித்த பதில்தான் நேருவின் இந்த பதில். பொருளாதார அடிப்படை என்பது அடிக்கடிமாறும். இந்த ஆண்டு ஏழையாக இருப்பவன் அடுத்த ஆண்டு பணக்காரனாக இருக்கலாம். பணக்காரனாக இருப்பவன் ஏழையாகலாம். எனவே அடிக்கடி மாறக்கூடிய அடிப்படையாக வைக்க இயலாது என்று நாங்கள் அல்ல பண்டித நேரு அவர்கள் 1952-53-ஆம் ஆண்டில் எடுத்துச் சொன்ன கருத்தாகும். இன்றைக்கு இந்த மண்டல் குழுவின் பரிந்துரையை நடை முறைப்படுத்துவதையே சாக்காக வைத்துக் கொண்டு தேசிய 14