உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயிகளின் பிரச்சினை அடுத்து, இந்த உரையின் மீது நடைபெற்ற விவாதத் தில் விவசாயிகளுடைய கோரிக்கைகளை அரசு சரியானபடி கவனிக்கவில்லை. அல்லது உடன்பாட்டிலே ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற விவாதம் முக்கியமாக இருந்தது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினு டைய மதிப்பிற்குரிய தலைவர் காமராஜ் அவர்கள். விவசாயி கள் கிளர்ந்து எழுவார்கள் என்கிற வகையில் கூட வெளி யிடங்களில் பேசிவருகிறார்கள். பத்திரிகைகளிலே அவை கள் பெரிய எழுத்துச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின் றன. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் எந்த உடன் பாட்டிற்கு வந்தன, அந்த உடன்பாட்டை இந்த அரசு நடை முறைப்படுத்தியதா, இல்லையா என்பதை இந்த அவைக்கு நான் விளக்குவதன் மூலம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் விளக்குவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். கோரிக்கை 1 அவர்களுடைய முதல் கோரிக்கை, விவசாயத்திற்கான மின்கட்டண உயர்வை ரத்துச் செய்ய வேண்டும். மின் துண் டிப்பு செய்தல் கூடாது. வறண்ட கிணறுகளுக்கு வருடாந் திர குறைந்த பட்சக் கட்டணம் வசூளித்தலை நிறுத்த வேண் டும். இது கோரிக்கை. உடன்பாடு என்ன, விவசாயத்திற்கான மின்சாரக் கட்டணம் ஒரு மாதத்தில் உபயோகப் படுத்தப்படும் மின்சாரத்திற்கு முதல் 100 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 12 பைசாவாகவும், அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு யூனிட்டுக்கும் 11 பைசாவாகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. து உடன்பாடு. எடுக்கப்பட்ட நடவடிக்கை- -இதன்படி மாற்றியை யமைத்து, 1-8-1972 அன்று அரசு ஆணை பிறப்பித்தது. அவ்வாறு அதை அரசு நிறைவேற்றியிருக்கிறது. கோரிக்கை 2 இரண்டாவது கோரிக்கை கடன் அரசாங்கக் கடன், வங்கிக் கடன் உட்படச் சகல வேண்டும். மோட்டார் பம்பு விவசாய சொத்துக்களை ஜப்தி நிறுத்த வேண்டும். இது கூட்டுறவு நிலவள பாக்கிகளையும் வஜா செய்ய செட்டுகள், கால்நடைகள், செய்வதை உடனடியாக கோரிக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/16&oldid=1705672" இலிருந்து மீள்விக்கப்பட்டது