உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மற்ற மாநிலங்களில் தற்போதுள்ள மின்சார வெட்டின் அளவு : அரியானா 80 சதவீதம், பஞ்சாப் 75 சதவீதம், உத்தரப்பிரதேசம் 40 சதவீதம், ஆந்திரப்பிரதேசம் 30 சதவீதம், மைசூர், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங் களில் 25 சதவீதம், மேற்கு வங்கம் 17 சதவீதம் இன்றைக்கு மின்வெட்டு மூலம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இன்றையத்தினம் எடுத்துச் சொல்லப்பட்ட மிகப் பெரிய குறையாகச் சொல்லப்பட்டது. பார்ப்பவர்களுக்குப் பாமரர்களுக்கு ஓகோ ; இதனால் தானே இவ்வளவு பெரிய ஆபத்து என்று எண்ணிடத்தக்க அளவுக்கு பெரிய குறையாக ஒன்று சொல்லப்பட்டது; சினிமாக்கள் மூன்று காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு குற்றச் சாட்டு. 2-வது; நீங்கள் ரூரல் எலக்டிரிபிகேஷன்-கிராமங் களுக்கு மின் வசதி கொடுப்பதற்கான ஒரு பெரிய திட்டத்தை ஆரம்பித்தீர்கள், அதன் காரண மாக இந்தச் சங்கடமான நிலைமை வந்துவிட்டது என்று சொன்னார்கள். முதலில், சினிமாவுக்கு மூன்று காட்சிகளுக்கான மின்சாரம் நாம் வழங்கவில்லை. நாம் ஒரு காட்சியைக் குறைத்து விடுங்கள் என்று உத்தரவிட்ட போது நாங்கள் 2 காட்சிக்குரிய மின்சாரத்தில் விசிறி முதலான 3 குறைத்துக்கொண்டு காட்சிகள் நடத்திக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டதால், 2 காட்சிக் குரிய மின்சாரம் தான் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சினிமாவிற்கும் அல்லது தெரு விளக்குகளுக்கும் கிராமப் புறத்து விளக்குகளுக்கும் ஆகின்ற மின்சாரச் செலவு எவ்வளவு என்பதைத் தயவு செய்து நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். வைகளைக் பார்ப்பதற்குப் பிரகாசமாக இருப்பதைச் சொல்லி, பார் பார் பட்டணத்தில், எவ்வளவு விளக்குகள் எரிகின்றன. பார் பார் சினிமாக்கள் நடக்கின்றன-பார் பார் கிராமத் திற்கு எல்லாம் இவர்கள் விளக்குகள் போட ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். அரிசனக் காலனிகள் அரிசனக் காலனிகளுக்கு 1967 வரையில் 4 ஆயிரம் காலனி களுக்குத்தான் போடப்பட்டிருக்கிறது. இன்று இந்த ஆட்சியிலே 20 ஆயிரம் காலனிகளுக்கு மின் விளக்குகள் போடப்பட்டு முடிந்துவிட்டது. இவைகளை எல்லாம் செய்தது தவறு, என்பதைப் போல. -ஆராயாமல் செய்த வேலை என்பதைப் போல-இன்றைக்குப் பேசுகிறார்கள். நான் அதற்காகத்தான் இந்தக் கணக்கை அளிக்க விரும்பு கிறேன். ஒரு நாளைக் நம்முடைய கு மாநிலத்திற்குப் பல்வேறு துறைகளுக்கும் தேவையான மின்சாரம் இலட்சம் யூனிட்டுகள். 225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/25&oldid=1705681" இலிருந்து மீள்விக்கப்பட்டது