உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 61 மைல்கற்களை நிச்சயமாக நான் கடந்திடுவேன்-நடந்திடு வேன்- உருண்டு கொண்டாவது திருச்செந்தூர் போய்ச் சேருவேனேயல்லாமல் (பலத்த ஆரவாரம்-கை தட்டல்) யார் கேலி பேசினாலும் - உருட்டினாலும்-திரட்டினாலும் நான் மிரண்டு போய்விடுகின்ற ஆள் அல்ல; காரணம் பெரி யாரின் தொண்டன், பேரறிஞர் அண்ணாவின் தம்பி, உங்க ளின் உடன்பிறப்பு (பலத்த கரவொலி). எனவே நாம் மேற்கொண்டிருக்கின்ற இந்தப் பயணம் தொடக்கத்திலே இவ்வளவு வெற்றிகரமாக நடைபெறுமா? என்றுதான் நம் முடைய கழகத்தினுடைய அமைப்புக்கள் அத்தனையும் யோசித்தன. நாம் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம்! என் தென் மாவட்ட அமைப்புக்களை கவனித்து வருகின்ற னுடைய அருமை நண்பர் தென்னரசு அவர்களும், நெல்லை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் அவர்களும், மதுரை மாவட்டச் செயலாளர் பொன். முத்துராமலிங்கம் அவர்களும், மதுரைநகர் மாவட்டச் செயலாளர் காவேரி மணியம் அவர்களும், கிழக்கு இராமனாதபுரம் மாவட்டச் செயலாளர் தா. கிருஷ்ணன அவர்களும், மேற்கு இராமனாத புரம் மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன் அவர்களும் மற்றும் இந்த எல்லைக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களும், சட்டப் பேரவையினுடைய முன்னாள் உறுப்பினர் களும், தங்களுடைய கழகத்தினுடைய வைரத் தூண்களாக விளங்குகின்றவர்களும் கலந்து பேசி இந்தப் பயணத்தை வெற்றிகரமாக எவ்வாறெல்லாம் நடத்திடவேண்டும் என்று எண்ணியபோது நாங்கள் ஒரு ஐயாயிரம் அல்லது பத்தா யிரம் பேர் வரக்கூடும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை நம்மால் முடிந்த அளவிற்குச் செய்து தரலாம் என்றுதான் எண்ணினோம். நாம் எண்ணியதைவிட நம்முடைய எதிரி கள் ஐயாயிரமாவது? பத்தாயிரமாவது? ஐம்பது அல்லது அறுபது பேர் வருவார்கள். இந்தக் கருணாநிதியை நம்பி யார் பின்னாலே நடப்பார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். அதிலே கூட எனக்கு ஒரு அதிக திருப்தி தான். ஐம்பது, அறுபது பேர் வந்தால் வருகிற வழியிலே அவர்களுக்கெல்லாம் இலை போட்டுச் சாப்பாடு. அதுவும் ஆறு அல்லது ஏழுவகை கறியோடு பரிமாறலாம் என்றுகூட 6-4 க பேர்