உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி பெருவிரல், இதோ, காணிக்கையாக, குருதேவா," என்று கொடுத்துவிட்டான். இது பாரதக் கதையில் ஒரு நிகழ்ச்சி ! குரு-சீட தத்துவத்தை விளக்கிடும் பக்திக்கு எடுத்துக் காட்டு! இத்தகைய குரூர குணம் படைத்த குருவும், கண் மூடிச் சீடருமா, இந்தக் காலத்திற்கு, எதிர்காலத் தமிழருக்குத் தேவையான பாடங்கள், போதனைகள், எடுத்துக்காட்டுகள் ! முன்மாதிரிகள் ! கூடாது! கூடவே இந்தக் காலத்திலே ஏமாந்த ஏகலைவர்களும் கிடை யாது, தேவையுமில்லை. அதேபோன்று, குரூர குணம் படைத்த துரோணாச்சாரியர்களும் இல்லை, இருக்கத் தேவையே இல்லை ! இதே போன்று, தேவகுரு, பிரகஸ்பதியின் மனைவி தாரை, பிரகஸ்பதியின் சீடனான சந்திரனை மயக்கி, தன் ஆசை நாயகனாக்கிக்கொண்ட கதை ஒன்றும் இருக் கிறது,காவியரசனையோடு குழைத்தும் தரப்படுகிறது! தேவையா? இத்தகைய அருவருப்பான, புராணங்கள் ? ஆபாசப் சீடனென்றும் பாராமல், சந்திரனைச் சல்லாபத்திற் கழைத்த தாரைகளும், குருபத்தினியென்றும் எண் ணிடாது, கூடிக்குலவின சந்திரனைப் போன்ற சீடர் களும், இவ்வளவும் நடக்கவிட்டு பின்னர் சாபந் தந்த 3 37