உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 நடந்துகொள்ள முற்படுவானேயானால்,சமுதாயம் அந்தத் திட் டத்தைப் போட்டதாக அர்த்தம். சமுதாயம் அப்படி ஒரு திட்டத்தைப் போட்டுக் கொள்ளுகிறது என்றால், நாடு, முற் போக்கான நிலைமையில் அடி எடுத்து வைப்பதாக அர்த்தம். பொருளாதாரத் துறையிலே ஏற்றம் பெற்றதாக அர்த்தம் அந்த அளவில் ஒவ்வொருவரும் திட்டம் போட்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தை குடும்ப நலத் திட்டம்-குடும்பத் திட்டம் - குடும்பக் கட்டுப் பாடு திட்டம் என்றெல்லாம் நாம் சொல்லுகிறோம். நாம் ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாடு என்று இது சொல்லப்பட்டது. இன்றைக்குக் குடும்ப நலத் திட்டம் என்று இதை அழைக்கின்றோம். குடும்பக் கட்டுப் பாடு என்றால் அது எல்லாவற்றிற்கும் பொருந்தும். குடும்பத் திலே உள்ளவர்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அடுத்த வீட்டில் போய் சண்டை போடக்கூடாது. எதிர்த்த வீட்டில் ஏதும் நடந்தால் அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. இங்கே கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்கின்ற அந்த அளவிலே கூட அந்தக் கட்டுப்பாட்டுக்குப் பொருள் பொருந் தும். ஆகவேதான் இதிலே கட்டுப்பாடு தேவையில்லை என்று இன்று நாம் முடிவெடுத்து, குடும்பம் நலமாக இருப்பதற்கான திட்டம் என்ற அளவிலே ந்தத் திட்டத்தின் பெயரை மாற்றி யமைத்ததின் மூலமாக பெயர் மாற்றத்திலே நமக்குள்ள ஆசையைக் காட்டவில்லை-இந்தப் பெயர் மாற்றத்திலே இருக் கின்ற உண்மையான பொருளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டிலே, ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டி போட்டுக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அது நல்ல வகையில் வளருவதற்கு சென்னை மாநகராட்சி மன்றமும் எல்லா முயற்சிகளையும் எடு துக் கொண்டிருப்பதுபற்றி நான் மிகவும் மகிழ்ச்சி யடைகின்றேன்.