கருணாநிதி சுறு சுறுப்புக்குப் பெயர் போனவன் என்பதெல்லாம், உங்களுக்குத் தெரியாத தல்ல. எனவே, இந்த நிலையில் எனக்கு ஒரு பட்டம் என் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதற்குச் சான்றா கத் தரவேண்டும். 'யோக்கியன்' என்ற அடைமொழியோடு என்னை இன்று முதல் அழையுங்கள் என்று கேட்டான். ஊரார் இதனை ஒப்புவரா? மாட்டார்கள் என்பது, உங்கள் அனைவரின் எண்ணத்திலும் தோன்றத்தான் தோன்றும். ஆனால், இங்கேதான் விசித்திரமான, வேடிக்கை யான நிகழ்ச்சி நடைபெறுகிறது. நண்பர்களே. 'சரி யோக்கியரே' என்று ஊரார் ஒப்பி, அந்த பலே சூதாடியை அன்று முதல் யோக்கியன் என்று அழைத்தனர். இது முதல் குட்டிக் கதை. என்னப்பா நடக்க முடியாத நம்பவும் முடியாத நிகழ்ச்சியைக் கதை யென்று கூறிக் கதைக்கிறாயே, என்று கனல் தெறிக்கப் பேசலாம் என்னைப் பார்த்து. நான் ஒன்றும் கதையளக்க வில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கத்தான் நடக்கின்றன. இங்கே, இன்று, இந்த நாட்டில் என்பதையும் விளக்கத்தான் போகிறேன் மற்ற இரு குட்டிக் கதைகளையும் கூறி விட்டு. 9
பக்கம்:புராணப்போதை.pdf/10
Appearance