புராணப்போதை மக்கள், மகான் (I) என்று புகழப்படும் ராஜாஜி யின் அறைகூவலை ஏற்று, அவருக்கு வெற்றி தேடித் தந்தனரா? காங்கிரசுக்கே, காங்கிரஸ் கட்சியின் அபேட்சக ருக்கே ஓட்டுகளைப் பெருவாரியாகப் போட்டுத் தேர்த லிலே காங்கிரசுக்கு வெற்றிபெற வழி வகுத்தனரா மக்கள், அருப்புக்கோட்டைத் தொகுதி மக்கள், வாக் காளர்கள்? காங்கிரசுக்குப் பூரண, பெருவாரியான வாக்குகளை யளித்து, வெற்றி பெறச்செய்து அதன் இராஜகோபா லாச்சாரியாரிடமும், அவரது மந்திரி சபையினிடமும் நம்பிக்கை இருக்கிறது; நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தனரா தெளிவாக? என்னதான் முடிவு: அருப்புக்கோட்டைத் தொகு தித் தேர்தலிலே யார்தான் வெற்றி யடைந்தது? காங்கிரசா? காங்கிர சல்லாதாரா வெற்றி பெற்றது? யாருக்கு வெற்றி கிடைத்தது. மக்களின் நம்பிக்கை காங்கிரசிடம் தான் என்பது தெளிவாகத் தெரிவிக்கப் பட்டுவிட்டதா, அருப்புக்கோட்டைத் தொகுதியிலே காங்கிரசையே மக்கள் ஆதரித்து, அமோகமான வாக்கு களைப் போட்டு, காங்கிரஸ் அபேட்சகரையே வெற்றி வீரராக்கியதன் மூலம்? இப்போது குறிப்பிடப்பட்டதுபோன்ற கேள்வி கள் அநேகம் கிளம்பத்தான் கிளம்பின. நாடெங்கும் 18
பக்கம்:புராணப்போதை.pdf/19
Appearance