காங்கிரஸ் கருணாநிதி சட்டசபையில், இன்று காங்கிரசை ஆதரிப்போர், கட்சியின் கட்டுக்கு அடங்கி,சார்ந்து அதன் தீர்மானங்களை வெற்றி பெற்றிடச் செய்திடு வோர், அனைவருமே காங்கிரஸ்காரர்களல்ல - காங்கிரஸ் கட்சியின் பேரால் தேர்தலுக்கு நின்று, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுமல்ல. குறைந்த அளவு மெஜாரிட்டிகூடக் கிடைக்க வில்லையே. காங்கிரசுக்குக் கடந்த தேர்தலிலே, சட்ட சபையில்! இந்த நிலையில், தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக நின்று காங்கிரசைத் தோற்கடித்துவிட்டுச் சட்ட சபைக்கு வந்த, காங்கிரசிடம் மக்களுக்கு இருந்த வெறுப்புணர்ச்சியின் விளைவால் சுலப வெற்றி கண்ட சிலரைத் தன் பக்கம், தனது கட்சிக்கு இழுத்துக் கொண்டார், ஆச்சாரியார், மந்திரி பதவி முதலிய ஆசை களைக் காட்டி! பல இதன் விளைவால் இன்று காங்கிரஸ்காரரும், தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக நின்று வெற்றி பெற்றுச் சட்டசபையினுள் நுழைந்தபிறகு, சந்தர்ப்பங்கள், சபலங்கள் காரணமாகக் காங்கிரசைச் சட்டசபையில் ஆதரித்திடுவோரும் சேர்ந்துதான், சட்ட சபையில் காங்கிரசின் பலத்தைப் பெரும்பான்மை யாக்கியிருக்கிறது. காங்கிரசுக்கு மெஜாரிட்டி இப்படித் தான் தேடப்பட்டுச் சேர்க்கப்பட்டது ஆச்சாரியாரால். 25
பக்கம்:புராணப்போதை.pdf/26
Appearance