கருணாநிதி வேடிக்கையான நிகழ்ச்சிதான் இது. நம்பிக்கை யற்றவர் என்று, நாட்டினரால் ஒதுக்கப்பட்ட ஆச்சாரி யாருக்கு நாடாளும் சட்டசபையிலே நம்பிக்கைத் தெரி' வித்த நிகழ்ச்சி மிகமிக வேடிக்கைதான். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட குட்டிக்கதைகளைக் கண்டு கொதிப்பேறியவர்களும், குற்றஞ் சாட்டியவர் களும், குறை கூறியவர்களும் இக்குல்லூகபட்டரைப் பற்றிய நிகழ்ச்சியைக் கண்டு என்னதான் கூறுவார் களோ நான் அறியேன். குட்டிக் கதைகளிலே கூறிய நிகழ்ச்சிகளைப் போலத்தானே,நடக்காத, நடக்க முடியாத, நம்பவும் முடியாத நிகழ்ச்சிகள் நாட்டில் நடக்கின்றன என்று கேட்பதில் தவறென்ன? குட்டிக் கதைகள் கூறிக் கூறி மக்களிடம் குலவு கிறார் ஒரு பக்கம். அதே நேரத்தில், சட்டசபையை குரங்காட்டம் என நினைத்து தம் மனம்போனபடியெல் லாம் ஆட்டிக் காண்பிக்கிறார். குட்டிக் கதைகளும், குரங்காட்டமும் நாட்டைக் கொண்டுவிடும் நிலைதான் எதுவோ? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! 27
பக்கம்:புராணப்போதை.pdf/28
Appearance