சடுகுடு விளையாட்டா? சவால் சண்டையா? சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர் கள், பதினைந்து ஆண்டுகட்கு முன்னர், சென்னை மாகா ணத்தில் காங்கிரசார் அமைத்த மந்திரிசபையின் பிரதம ராகக் கொலு வீற்றிருந்தார். அதன் பின்னர், ஐந்து ஆண்டுகளுக்குமுன் மீண்டும் அவரையே பிரதமராக்க முயற்சிக்கப் பட்டது. சில காங்கிரஸ்காரர்களாலும், டெல்லியிலுள்ள காங்கிரஸ் மேலிடத்தாராலும். இந்த முயற்சி, சென்னை மாகாணத்தின் அப்போ தைய காங்கிரசின் சூழ்நிலையால் முடியாது, முறிந்து போய்விட்டது என்பதெல்லாம், அனைவருக்குந் தெரிந்த பழங்கதை யாகும். இந்த மாகாணத்திலிருந்து, இந்த மாகாணத்தின் அரசியல் வாழ்விலிருந்து விலக்கப்பட்ட ஆச்சாரியார், மேற்கு வங்க மாகாணத்தின் கவர்னராக நியமிக்கப் பட்டார். அதன் பின்னர் இந்த யூனியனின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலானார். இதற்குப் பின்னர், மத்திய சர்க்காரின் இலாக்கா இல்லாத மந்திரி பதவி வகித்தார். சிலகாலம். 28
பக்கம்:புராணப்போதை.pdf/29
Appearance