கருணாநிதி குட்டிக்கதைகளும், பஜகோவிந்தமும் கூறியும் பாடியுமே காலந்தள்ள முடியுமா? அருப்புக்கோட்டை அதிர்ச்சி அவரை இப்படிப் பேச வைத்திருக்கிறது என்பதல்லாது, வேறு என்ன? ஆச்சாரியார் இப்படி எதை யெதையோ பேசிக் குட்டிக் கதைகள் கூறி மக்களின் கவனத்தையும் கருத்தையும் வேறு பக்கந் திருப்பித் தன் வழியே ஆட்சியில் வீற்றிருக்கலாம் அலுப்பேதுமின்றி என்று எண்ணுவது முறையாகுமா? ஜனநாயகம், ஜனநாயகம் என்று பேசும் ஆச்சாரி யாரே! ஆண்மை யிருந்தால் தேர்தலுக்கு நின்று பாருங் கள் என்று மக்கள் கேட்டிடும் குரலைக் கவனியுங்கள் கவனியுங்கள்! கேளாக் காதாகத்தானே தாங்கள் இத்தகைய நேரங்களில் எல்லாம் இருப்பது வழக்கம்? அதற்கு இப்போது மட்டும் விலக்காகி விடுவீரோ? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் என்பதை மறந்து குட்டிக் கதைகள் கூறிக் கொட்டாவி விட்டுக் குதூகலிக்க வேண்டாம் ஆச்சாரியார், அவசரப் பட்டு! என்று தெரிவிக்க வேண்டியிருக்கிறது. 55 35
பக்கம்:புராணப்போதை.pdf/36
Appearance