கருணாநிதி கிளைவின் உருவிலே வந்த ஆங்கில ஏகாதிபத்தியம் நாடு விடுதலை பெற்ற பின்பும் மவுண்ட்பேட்டன் பிரபு வடிவிலேகூட சிலநாள் நிலைத்திருந்து பின்னர் வெளி யேறியது? ஆனால் கவர்னர் பிரகாசாவின் பேச்சுப்படி, பிரகாசா உருவிலே வரும் வடநாட்டு ஏகாதிபத்தியம். பிரகாசா உருவிலேயே திரும்பும் - திருப்பி யனுப்பப் படும் திராவிட நாட்டை விட்டு என்பது மட்டும் நிச்சயம், நிச்சயம் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். திராவிடர் தம்மை உணர்ந்து உணர்ச்சி பெற்று, தன்மானப் பற்றுகொண்டு தன்னாட்சி நடத்தத் துடித்தெழுந்து விட்டனர். திராவிடன் தன்மானமிழந்து, பாரில் அடிமை யாய், ஏவலனாய் வாழ்ந்திடும் நிலையிலிருந்து விடுபட, வடநாட்டின் பிடியிலிருந்து விடுபட முனைந்துவிட்டான் என்பதை மறந்து, மறைத்துத் தம் போக்கிலேயே ஆள வந்தார் நடந்திடுவது நாட்டு நிலையை நன்கு புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, நாட்டினரின் நல்லெண் ணத்தையே போக்கிக் கொள்வதாகும். ஜனநாயம், ஜனநாயகம் என்று குரல் வலிக்கக் கூவி வந்த காங்கிரசார், தம்மை வடநாட்டாரின் ஏவல ராக்கிக்கொண்டு, கிளைவ் பரம்பரையை வாழ்த்தி வணங்கிக்கொண் டிருப்பது நாட்டிற்கு, திராவிட 4 49
பக்கம்:புராணப்போதை.pdf/50
Appearance