உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை கேள்வி! கேள்விக்குறி! சிந்தனையின் அறிகுறி அறிவின், ஆராய்ச்சியின் ஆரம்ப அத்தியாயம், முதல் கட்டம், முன்னேற்றப் பாதையின் முதல் எல்லைக் கோடு! எண்ணத் தெளிவின் ஏணிப்படி! விளக்கத்திற் கான விவாதத்தின் விடிவெள்ளி! கேள்வி! கேள்விக்குறி! ஏன்? எதனால்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகள் மனிதனது சிந்தனையைக் கிளறி, தூண்டி,எதையும் ஆராய்ந்திடச் செய்து, அதன் பலனை அடைந்திடப் பயன்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மைதானே! ஏன்? எதற்காக! என்பன போன்ற கேள்விகள் கேட்டிடும் எண்ணமே தோன்றாம லிருந்துவிட்டால், எண்ணந்தான் வளருமா? வளரமுடியுமா? எண்ணம் மட்டுமல்ல, மனிதனது இன்றைய வளமான வாழ்க்கை நிலை முன்னேறிதான் இருக்குமா? முடியாது! எண்ணத்தைக் கட்டுப்படுத்தி, கேள்வி கள் கேட்டிடும் பண்பும் பட்டுப் போயிருப்பின்,ஏன், இன்றுகூடப் பட்டுப் போய்விடின் மனித வாழ்வு வசதியும் வளமும் பலவிதங்களிலே இயற்கை வளத் தைப் பண்படுத்தி யுண்பதும், உடுப்பது மட்டுமல்ல. இயற்கைச் சக்திகளையே திரட்டித் தேக்கி, தேவையான நேரத்தில், வழியில், வகையில் செலுத்தி மனித உழைப்பை, உடலுழைப்பின் அலுப்பை, ஆயாசத் தைப் பெருமளவு குறைத்துக் கொள்ளவும் முடியாது, முடியவே முடியாது! 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/69&oldid=1706118" இலிருந்து மீள்விக்கப்பட்டது