புராணப் போதை! பஜனையும் பஜகோவிந்தம் பாடிக்கொண்டு இருக் கும்படிக் கூறிக்கொண்டு காலங் கடத்திடும் நிலையிலே நாடாளும் முதல் அமைச்சர் ஆச்சாரியார் பங்கீடு முறையை ஒழித்தார், பகவான் மீது பாரத்தைப் போட்டு! அதன் விளைவால் என்ன பலன், பயன் என்று பார்த்தோம். பங்கீடு' ஒழிக்கப் படுகிறது பகவான் சொன்னார். ஒழித்து விட்டேன், என்கிறார் ஒரு சமயம். 'பங்கீடு ஒழிப்பு தோல்வியுற்றால், என் வேலையை விடுகிறேன் என்றும் பேசுகிறார் ஆச்சாரியார். எப்படியோ,பகவானையும், பகவானைப் போற்றிப் புகழ் பாட, மக்களின் மனதைக் கலக்கிக் குழப்பிடப் புண்ணிய கதைகள் என்ற பெயரில், அத்தைப் பாட்டிக் கதைகள் என்ற முறையில், காவியம், ஓவியம், ஆண்டவன் காதை, அருள் வழிப்பாடல்கள் என்றும் பலப்பல உருவங்களிலே பாலப் பருவத்தி லிருந்தே. பக்தி, பாராயணம், நரகம் மோட்சம் பயம் என்ற பலப் பலகாரணங்கள் காட்டி புராண இதிகாசங்களையும் பக் கத் துணையாகக் குட்டிக் கதைகள் கூறிக்கொண்டிருக் கிறார் ஆச்சாரியார். 79
பக்கம்:புராணப்போதை.pdf/80
Appearance