புராணப்போதை புராணம் - ஒரு போதை! மக்களின் மயக்கத்திற்கு. மன மயக்கத்திற்குக் காரணமாக விளங்குகிறது! புராணப் போதை வழி வழியாக, பழக்க வழக்கம் ஊட்டப்பட்டு, ஊறிப் போயிருக்கிறது, மக்களின் மன தில், எண்ணத்தில்! ஊறிப் பதிந்து போன, அந்தப் போதையை மீண் டும் மக்களிடையே, பேசிப் பேசி, பிரசாரம் செய்து ஊட்டி வருகிறார், ஆச்சாரியார்-நாடாள வந்தவர்! இதே நேரத்தில், மடாதிபதிகளும், இந்தப் பணி யில் - புராணப் போதை யேற்றிடும் பணியில் தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர். புராணம், புதுவாழ்வு பெற்றுப் போதை யேற்றி போதையிலே சிக்கித் தவித்திடும் நிலையில், மக்களை மனம் போனபடி யெல்லாம் ஒரு சிலர், ஆட்டிட் படைக்க வழியும் வகையும் வசதியும் செய்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. புராணம்- பக்திக் கதை- பரந்தாமன் திருவிளை யாடல், படித்தால் புண்ணியம் பாவம் போகும் படிக்காவிட்டாலுங் கூட, படிப்பதைப் பக்கம் நின்று கேட்டாலே கூடப் பாவந் தீர்ந்து பரகதியில் முக்திகிட் டும் என்ற முன்னுரையுடனே. முதலில் மக்களிடையே தரப்படுகிறது; போதிக்கப் படுகிறது. பேசாமல்படி, கேள்விக் குறியெழுப்பிடாது கேள். ஆராய்ச்சி செய்திடாது, அதன்படி நட! சந்தேகித் தாலே சங்கடம் வரும் பகவான் மீது பாரத்தைப் 80
பக்கம்:புராணப்போதை.pdf/81
Appearance