கருணாநிதி சிவனாரின் திருமுடியைக் கண்டேன், வெற்றி கொண் டேன் விஷ்ணுவை! என்று எக்காளமிட்டுப் பின் புரட்டு வெளிப்பட்டு கைலாசபதியின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளானாராம். இதனால், இத்தகைய ஆண்டவன் லீலைகள் நடை பெற்றக் காரணத்தால் திருவண்ணாமலை புனித ஸ்தல மாகிவிட்டதாம். இப்படித்தான், ஏனோ எதற்கோ மிரண்ட கழுதை புல் சுமந்த புலைச்சியைத் துரத்த, புல்லுடன் புலைச்சி கோவிலைச் சுற்றிச் சுற்றியோட, அவளைத் தொடர்ந்து ஓடித் துரத்திய கழுதைக்கும், பயந்தோடிய புலைச்சிக் கும் மோட்ச சாம்ராஜ்யம் கிடைத்ததாக ஒரு புராணம் கூறுகிறது. தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த தனய யனுக்கு முத்தி தந்த கதையுமிருக்கிறது திருவிளை யாடற் புராணத்திலே! திருடியேனும் பகவான்மீது பக்தி குன்றாது பூஜை செய்த திருமழிசை ஆழ்வார்களைக் காணலாம் புராணத் தில், புண்ணிய புருடர் என்ற போற்றுதலுக்கிடையே! வேறொரு வேடிக்கையை, விசித்திரமான புராணத் திலே ஒரு நிகழ்ச்சியைப் படித்தேன். வெட்கித் தலைகுனிந்திட வேண்டிய அளவுக்கு அதிலே ஆபாசம் ஆண்டவர்மீது பொழியப்பட் டிருக் கின்றது! 85
பக்கம்:புராணப்போதை.pdf/86
Appearance