உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு படியோ கணிக்கப் பட்டவை அல்ல! பார்வையாலும் உத்தேசத்திலும் சிலரை இதற்கு முன்பு கேட்டிருந்த முறையிலும் ஓரளவுக்கு நினைவு வைத்துக் கொண்டு எழுதப்பட்டவையாகும்! திடீரென்று என்னப்பா வயதுக் கணக்கில் புகுந்து விட்டாய் என்று கேட்கிறீர்களா? குறிப்பிடப் பட்டவர்களில் ஒருவர் இருவரைத் தவிர எல்லோருமே கல்யாணம் ஆன தோழர்கள்; ஆனபடியால் திருமண அப்ளிகேஷன் என்று யாரும் தவறாகக் கருதவேண் டாம். அப்படிப்பட்ட விவாக விண்ணப்பம் என்றால், வயதுகளைக் குறைத்தல்லவா சொல்லியிருப்பேன்! மேலே குறிப்பிட்டவர்கள் எல்லோருமே சிறுவர் கள் என்று கூறினால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறதல் லவா? ஆனால் நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள்தான்! பெரியார் இராமசாமி அவர்கள் முன்பெல்லாம் அடிக்கடி சொல்லுவார்கள்; 'எனக்கு வயதானால் கூட என் உள்ளம் இளைஞன் உள்ளந்தான்" என்று! அதைப்போல இளைஞர் உள்ளங் கொண்டவர்கள் தான் தி.மு.கழகத்திலேயுள்ள, கிழவர் வாலிபர் எல் லோருமே. அதுமட்டுமல்ல; தி.மு. கழகத்தின் சட்ட திட்டமே பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைத் 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/38&oldid=1706281" இலிருந்து மீள்விக்கப்பட்டது