உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி கோயங்காவின் செல்வம், திராவிடத்திலே சுரண் டப்பட்ட செல்வம் ! இந்த - இரண்டு செல்வங்களும் மோதுகின்றன! விபீஷணர்கள் சுக்ரீவர்கள் கோயாங்கா பக்கத் திலே! காங்கிரஸ் படையிலே ! வீரர்கள், சுயமரியாதை உணர்வு பெற்றவர்கள் அத்தனை பேரும் நம் பக்கத்திலே ! காங்கிரஸ் அவசர அவசரமாகச் சவக் குழிக்குச் செல்லவேண்டும். அந்த சத் காரியத்திலே ஈடுபடச் சங்க நாதம் செய்து விட்டார்கள் தென்னாற்காட்டார். தென்னாற்காடே! திராவிடத்தின் தூண்டா மணி விளக்கே! தேன் கீதமே! தித்திக்கும் திராவிடக் கனியே! உன் திறமையைக் காட்ட நேரம் வந்து விட்டது தயாராகிக் கொள்! சிங்க நெஞ்சு கொண்ட தென்னாற் காட்டுச் செயல் வீரர்காள்! உங்கள் சிரிப்பிலே அழியட்டும் சீர்கெட்ட காங் கிரஸ்! பணம் விளையாடும்! காங்கிரசின் பட்டாளம் வேலை செய்யும் ! அஞ்சேல், அயரேல் திராவிட நாட்டுக் குரல் சட்டசபையிலே, பார்லி மெண்டிலே ஒலிக்கப் போகிறது ! அதற்கு வலிமை தேடித்தா! தோளுயர்த்திவா தொண்டாற்ற! தி.மு.க. 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/55&oldid=1706300" இலிருந்து மீள்விக்கப்பட்டது