உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ருக்கிறது. மேலும் 3 கப்பல்களை, பாகிஸ்தான் இழந்திருக் கிறது. நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றையும் பாகிஸ்தான் இழந் திருக்கிறது. இவைகள் எல்லாம் பாகிஸ்தானின் இழப்பின் ஆரம்பம்தான். இழப்பின் முடிவு எதுவாக இருக்குமோ? ஒரு வேளை பாகிஸ்தானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியாவின் பலம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, அகில உலகத்திற்கும் காட்டப்படுகிற அளவில் உயர்ந்திருக்கிறது என்பதில் பெருமைப்பட வேண்டும். போர் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவும், அவர்கள் போர்க்களத்தில் உத்வேகத்துடன் போராடவும் அவர்களுக்குப் பின்னால் நாம் அனைவரும் இருக்கிறோம் என்கிற உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படும்படிச் செய்ய வேண்டும். கோஸிஜின் அறிக்கை கூறுவதென்ன? இன்றையக் காலைப் பத்திரிகைகளில் வந்திருக்கும் செய்தி யானது மேலும் நமக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. சோவியத் நாட்டின் பிரதம மந்திரி கோஸிஜின் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். 'இந்தத் தகராறில் உலக நாடுகளில் எந்த நாடாவது தலையிட்டால் அது தவறு' என்று அவர் கூறியிருப்பது போற்றத்தக்கதாகும். அதாவது இந்தப் போரில் வேறு எந்த நாடாவது தலையிட்டால், நாங்க ளும் தலையிடுவோம்' என்று கூறுவதாகத்தான் நாம் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நல்லெண்ணத் தோடு இந்தியாவை அணுகுகின்ற நாடுகளுக்கெல்லாம் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். வங்க தேசம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் மக்கள் இந்தப் போராட்டத்தில் தங்க ளுடைய கடமையினைக் கட்சி, மதம் இப்படிப்பட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து நிச்சயமாக வழங்குவார்கள் என்ப த தனைத் திட்டவட்டமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். தீர் மானத்தை வழிமொழிந்து பேசிய அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும், தீர்மானத்தை முன்மொழிந்தவன் யில் என்னுடைய அன்பான நன்றியை மிகுந்த பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/15&oldid=1706849" இலிருந்து மீள்விக்கப்பட்டது