உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காதலனை இழந்து-பூ இழந்து, பொட்டு இழந்து, பொலி விழந்து சோகச் சித்திரமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந் தார்கள். என்பதை. ஆகவே, எந்தச் சூழ்நிலையில் சென் றான் - யுத்தத்தில் மாண்டான் என்பது வேறு. இப்பொழுது சா வதற்காகவே செல்கிறான் ; போர் முனைக்குச் செல்லும் வீரர்கள் காகவே சாவதற் செல்கிற வர்கள்: அவர்கள் தங்களைப் பிணமாக ஆக்கிக் கொள் வதன் மூலம் இந்த நாட்டு மண்ணின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த நாட்டுச் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த நாட்டு மண்ணின் உரிமை காப்பாற்றப் படவேண்டும் என்று சொல்கின்ற போர்வீரர்களின் குடும் பத்தைக் காப்பாற்றுகின்ற முழுப் பொறுப்பையும் அரசாங் கம் ஏற்றுக் கொள்கிறது. டாக்டர் ஹண்டே அவர்கள் குறிப்பிட்டதைப் போல, ரிசர்வ் நிதியிலிருந்து உதவக்கூடிய நிறுவனங்கள் வீரர் களின் குடும்பங்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பை நிச்சய மாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்த அவையின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன். அள்ளித்தருக போர் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியைப் வீரர்கள் மட்டும் சமாளித்து விடுவார்கள் என்று நாம் கைகட்டி, வாளா இருத்தல் கூடாது ; அப்படி இருக்கவும் முடியாது. இந்திய நாட்டில் இருக்கிற ஒவ்வொரு குடிமகனும் நெருக்கடிப் பொறுப்புகளை உணர்ந்தாக வேண்டும். போர்க் கருவிகளைப் புதிது புதிதாக வாங்குவதற்கும், போர்த் தளவாடங்களை உ ற்பத்தி செய்வதற்கும் ஏராளமான பணம் தேவைப்படும். அதை வட்டியின்றித் தருவதற்கும் இந்தி யாவில் இருக்கிற ஒவ்வோரு குடிமகனும் தயாராக இருக்க வேண்டும். அதில் தயக்கம் காட்டக் கூடாது. அதிலும், தமிழகம் இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். நான், தமிழ் நாட்டில் இருக்கிற நாலரை கோடி மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து, இதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். போருக்கான நிதியைத் திரட்டுகிற பணி ஆரம்பமாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/20&oldid=1706854" இலிருந்து மீள்விக்கப்பட்டது