உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தமிழகத்தில் பொதுப் பணியாளர்கள், பொது நோக்கு டையவர்கள் போர் வீரர்களுக்குத் தேவைப்படுகிற மருந்து களை வாங்கிப் போர்முனைகளுக்கு அனுப்புதல், தேவையான உடைகளை வாங்கி அனுப்புதல், மேலும் போர்முனைக்குச் சென்று போரில் ஈடுபட்டிருக்கும் வீரர்களின் குடும்பங் களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருதல் ஆகிய காரியங்களில் நாட்டில் உள்ள நல்லவர்கள் ஈடுபடவேண்டும். இப்போது நாம் நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். யுத்த நேரத்தில் போர்க்களத்திலே இருக்கிற வீரர் களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கவும், போர்க்காலச் செலவுகளை ஈடுகட்டவும் ஒவ்வொரு நாளும் செலவழித்து வருகின்ற ரூபாய்க்கு வழி வகை செய்யவும் அரசு மாத்திர மல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் கடமைப் பட்டிருக்கிறோம். அந்த வகையிலே, யுத்த நிதி திரட்டப்படுமானால் அதற்கு நம்மால் இயன்ற தொகையைத் தந்திட வேண்டும். தமிழ் நாட்டு மக்கள் நல்ல காரியத்திற்குத் தொகை வழங்க என்றுமே தயங்க மாட்டார்கள். அதுவும் இப்படிப் பட்ட நெருக்கடியான காரியத்திலே இந்த மண்ணுக்கு வந்த ஆபத்தை நீக்குகின்ற வகையில் அவர்கள் மனந்தளராமல் பெருந் தொகையைத் தந்துதவுவார்கள் என்பது நமக்கெல் லாம் தெரியும். ே இன்று காலையிலே பேரவையிலேகூட நான் அறிவித் திருக்கிறேன். அமைச்சர் பெருமக்கள் 500 ரூபாய் யுத்த திக்குத் தருகிறார்கள் என்றும், சட்டப் பேரவை உறுப்பினர் வாருவரும் 100 ரூபாய்க்குக் குறையாத தொகையைத் விருக்கிறார்கள் என்றும். அவர்களுக்குக்கெல்லாம் இந்த மன்றம் இளைத்ததில்லை. இங்கிருக்கும் உறுப்பினர்கள் நூற்றுக்கு மேல் இருநூறு கூடக் கொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆகவே 100 ரூபாய்க் க் குறையாத ஒரு தொகையை இந்த மன்றத்திலே இருக் கிற உறுப்பினர்கள் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். (கையொலி எழும்புகிறது) தருவீர்கள் என்பதற்கு அடையாளமாக நான் உங்களுடைய கையொலியைப் பெற் றிருக்கிறேன். இரத்த தானம் இரத்த தானம் செய்வது மிக முக்கியமான செயலாகும். அதற்கு ஏற்ற வகையிலே இங்குள்ள சட்டப் பேரவை உறுப் பினர்களும், மேலவை உறுப்பினர்களும் ரத்த தானம் செய் யத் தங்களுடைய குரூப்'புகளைப் பார்த்துக் கணக்கெடுக்க இங்கேயே நாளை அல்லது மறுநாள் மருத்துவர்கள் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/21&oldid=1706855" இலிருந்து மீள்விக்கப்பட்டது