உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 செல்லும் தகைமைசால் மைந்தர்கள் தோகையாள் கண் துடைத்து எதிரியின் வியூகத்தைப் பிளக்கச் செல்லும் இளங் காளையர்-மழலைக்கு முத்த மழைபொழிந்து மாற்றா ரைப் புறங்காணப் பறந்தோடும் புறநானூற்றுச் செல்வங் கள் இவர்கள் எல்லாம் சாவின் கோரக் கரங்களுக்கு அஞ்சா மல் சமர்க்களம் செல்லும் தியாகச் சுடர்கள் அன்றோ ! விடைபெற்றுக் களம் சென்ற மகனின் ராணுவ உடைகள் மட்டும் திரும்பி வந்து அவைகளைக் கண்ணீரால் நனைக்கும் தாய்களின் பாதங்களுக்கு மலர்கள் தூவி வணங்குகிறோம். என் றாலு ம், அந்தத் தாயும் அந்தக் குடும்பமும் பொறுப்பை நாமல்லவா ஏற்றுக்கொள்ள வேண்டும்? வாழும் களத்தில் நிற்போர் காக்கி உடை அணிந்த வீரர்கள்.... அந்த உடை அணியாத நாம் போர்க் களத்தில் இருக்கிற உணர்ச்சியோடு காரியங்கள் ஆற்றியாக வேண்டும். . வெளிப் பகை யுத்தத் தளவாடங்களோடு வரும். உட் பகை, கறுப்புச் சந்தைக்காரர்கள், கொள்ளை வியாபாரிகள், பதுக்கல்காரர்கள், அவசர நிலை உணராமல் ஆர்ப்பாட்டங் களில் ஈடுபடும் ஐந்தாம் படையினர் ஆகியோர் உருவிலே வரும். மேற் அவர்கள் மீது அரசு, உடனடியாக நடவடிக்கை கொள்ளாவிட்டால், எதிரிகளுக்கு இடம் கொடுத்த தீங்கினைச் கு செய்த குற்றத்திற்கு ஆளாகும். அவர்களை அரசு மட்டுமன்றி நாட்டு நலனில் அக்கறை யுள்ள பொதுமக்களும் அடையாளங்காட்டிடத் கூடாது. ஐந்தாம் படையினர் தவறக் போர் நேரத்தில் வதந்திகள் எதிரியின் கணைகளை விடக் கொடியவைகளாகும். வதந்திகளைப் பரப்புவோர் ஐந்தாம் படையின னரில் ஒரு பிரிவினரேயாகும். போர்க் காலத்தில், உற்பத்தி பெருக, தொழிலாளத் தோழர்களும், தொழில் அதிபர்களும் தங்கள் ஒத்துழைப் பைத் தந்தாக வேண்டும். நாட்டின் பாதுகாப்பு - நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக் கடி இவைகளை மாணவ நண்பர்கள் உணர்ந்து பணியாற்று கிறார்கள் என நம்புகிறேன். அவர்களிடையே இந்தியாவின் எதிரிகள் மாணவர் வேடத்தில் நுழையக் கூடும் - தூண்டி விடக் கூடும். அந்த எதிரிகள் தொலைவிலிருந்து அல்ல துரோகச் சகதியிலிருந்து முளைத்திருப்பவர்களேயாகும். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/25&oldid=1706859" இலிருந்து மீள்விக்கப்பட்டது