உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி "செல்லாத்தாக் கவுண்டரிடம் உண்மையான விபரத்தைச் சொல்லி அவரை சமாதானப்படுத்தி, அவரையும் இருந்து இந்தக் கலியாணத்தை நடத்தச் சொல்லக் கூடாதா?" மனைவியின் இந்தக் கருத்தைக் கேட்டதும் மலைக்கொழுந் தாக் கவுண்டர் சிடுசிடுவென முகத்தை மாற்றிக் கொண்டு ஏதோ முணுமுணுத்தவர்; அறைக்குள் அங்குமிங்கும் உலவிக் கொண்டேயிருந்து விட்டுப் பிறகு மனைவியையும் மகளையும் பார்த்து தனக்குற்ற சங்கடமான நிலையை விளக்க ஆரம் பித்தார். "இதோ பாருங்கள் பெருமாயி! தாமரை! மாந்தியப்பன் தான் மாப்பிள்ளையென்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு சுமங்கலிப் பெண்களிடம் அருமைப்பெரியோர் சீர்த்தட்டங் களை நீர் சுற்றிக் கொடுத்தாயிற்று! முப்புரித்தாலிக்கான பொன்னும் வழங்கி பொற்கொல்லரும் அதனைத் தயாரித்து அனுப்பி வைத்துவிட்டார். நெல் வேகவைத்து உலர்த்தும் சடங்கும் மணவீட்டில் நடந்துவிட்டது. பாலுள்ள மரத்துக்குப் பால்விட்டுப் பூஜை செய்து ஒரு கிளையை வெட்டி மூன்று கட்டுக்கட்டி மணவிழா மண்டபக் கூரையின்மீது காயப் போட் டாகி விட்டது. இரு வீட்டாரும் இருகூடை உப்பு மாற்றியாகி விட்டது. மணவறையில் மேடையிட்டுப் பூசி மெழுகப் புற்று மண்ணும் சம்பிரதாயப்படி எடுத்தாயிற்று. இருபத்தி நாலு நாட்டில் உள்ள பெரியவர்களையும் வாழ்த்து வழங்க வரு மாறு அழைத்து அவர்களும் பெரும்பாலோர் வந்திறங்கிவிட் டார்கள். மாப்பிள்ளை தலையில் தொங்கவிட்டுக் கட்டிச் சிங்காரிக்க உருமாலையும், வால்கோவணம் போட்டு உடுத் திட பட்டு வேட்டியும், மாலையணிவித்து அழைத்துவர வாட்ட சாட்டமான குதிரையும் மாப்பிள்ளையின் மைத்துனன்; அதா வது நமது மகன் சின்னமலைக்கொழுந்து தயாரித்துவிட்டான். திருமணச் செய்தி; சோழன்தோட்டி மூலமாக எல்லா ஊர் களுக்கும் முரசு ஒலியால், "குப்பாரிகொட்டித் தெரிவிக்கப் பட்டாகிவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் நமது வீட்டுக்கு மர புப்படி நாழியரிசிக் கூடை அனுப்பி வைத்தது மட்டுமல்ல; பொன் பூட்டிக் குலம் ஓதுதல்' என்ற சடங்கு செய்யவும் மணமகனின் உறவுப் பெண்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக் குப் 'புதுக்கலத்துண்ணல்" என்ற விருந்தும் நம் வீட்டில் நடைபெற்றாகி விட்டது. இத்தனைக்கும் பிறகு: செல்லாத்தாக் கவுண்டரிடம் இந்தத் திருமணம் நின்றுவிட்டது என்று எப்படி முகம் பார்த்துச் சொல்ல முடியும்? வளநாட்டிலிருந்து வந் திருக்கும் மாப்பிள்ளை வீட்டார் மட்டுமல்ல; பிற நாட்டி 44 .. 21