உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் தாமரைநாச்சியை மணக்க, மணக் கோலத்துடன் வந்தபோது மாந்தியப்பனிடம் காணப்பட்ட இளமை குறுகுறுப்பு இப் போது இல்லாவிட்டாலும் - நல்ல முறுக்கேறிய கட்டுக்கோப் பான உடலுடனும், அடர்த்தியான மீசையுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் அவன் விளங்கினான். நெல்லி வளநாட்டு எல்லைக் காவல் ஆட்சித் தலைவர் செல்லாத்தாக் கவுண்டரின் மகன் இளவரசன் மாந்தியப்பன் அந்த இடத்துக்கு வந்ததுமே; அவனுக்கு வழிவிட்டுக் கூட்டத் தினர் ஒதுங்கி நின்றனர். மாந்தியப்பனைக் கண்டதும் சின்னமலைக்கொழுந்து கண் கலங்கினார். என் பெண்களைக் காப்பாற்றுங்கள் என்பது போல அவரது உதடுகள் நடுங்கின! தன் தங்கை தாமரை நாச்சியாரை மாந்தியப்பனுக்கு மணம் செய்து வைக்காத கோபம் இன்னமும் அவனுக்கு இருக்குமோ என்ற சந்தேகமும் சின்ன மலைக்கொழுந்துக்கு இல்லாமல் இல்லை. மலைக்கொழுந்தாக் கவுண்டருக்குப் பிறகு பெருமாயி அம் மாளும் காலமாகி விடவே மணியங்குரிச்சியின் காணியாளர் பொறுப்பை சின்னமலைக்கொழுந்து ஏற்றுக் கொண்டு ஆரிச் சம்பட்டியெனும் மணியங்குரிச்சிப் பகுதியில் தனது ஆதிக் கத்தை நிலைநிறுத்தியிருந்தார். தாய் தந்தையர் உயிருட னிருக்கும் போதே சின்னமலைக்கொழுந்துக்கும் சிலம்பாயிக் கும் திருமணமாகி விட்டது. மணவிழா முடிந்த நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே முத்தாயி, பவளாயி என்ற பெண் குழந்தைகளுக்கும், வையம்பெருமான் என்ற ஆண் மகவுக்கும் சின்னமலைக் கொழுந்தும் சிலம்பாயியும் தாய் தந்தையாயினர். பின்னர் சின்ன மலைக்கொழுந்தின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மரணத்தைத் தழுவினர். ஆரிச்சம்பட்டி மணியங்குரிச்சியில் நடைபெற்ற நல்லவை கெட்டவை எதற்குமே தாமரைநாச்சியோ அல்லது அவளது கணவனோ அழைக்கப்படவில்லை. மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும் என்ற மொழிக்கொப்ப தாமரையும்; தான் பிறந்த வீட்டைத் திரும்பிப் பார்க்கவில்லை! ஆனால் இப்போது காவிரியாற்றில் ஓடங்களில் தவித்துக் கொண்டிருக்கும் தனது அண்ணன் பெண்களைக் காப்பாற்றத் தனது மக்கள் இருவரும்தான் முயற்சி செய்கிறார்கள் என்பதும் தாமரைக்குத் தெரியாது! தாமரையாள் ஈன்றெடுத்த தவப் 76