உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் கிறது என் குதிரை! உன்னைத் தூக்கி வைத்துக் கொண்டு அதில் போகப் போகிறேன். வா! என்று மூர்க்கத்தனமாகக் கூறிக்கொண்டே, கடல் நண்டின் கால்களைப் போல் நீண்டி ருந்த தன் கைகளால் அவளை இறுகத் தழுவினான். அவள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு நழுவிக் கொண்டு ஓடினாள். அவன் விடவில்லை. ஓடிய வேகத்தில் அருக்காணி, விழாப் பந்தலுக்கு மேல்புறத்தில் மண்டிக்கிடந்த புதர்களுக்கு மத்தியில் மறைந்து கொண்டாள். எனினும் மாந்தி யப்பன் அவளை விடவில்லை. தொடர்ந்து துரத்தினான். புதர் மறைவுக்குள் புகுந்து புகுந்து அங்குமிங்கும் ஓடியவளை அவ னும் முன்னும்பின்னுமாக ஓடித் தத்தளிக்கச் செய்தான். ஓடிக் கொண்டிருந்த அருக்காணி, அங்கு நின்றிருந்த மாந்தி யப்பனின் குதிரையருகே போய்க் கீழே விழுந்தாள். எழுந் தாள். பார்த்தாள். அந்தக் குதிரையின் பக்கத்திலிருந்து அவளை வாரியணைத்துத் தூக்க மாந்தியப்பன் குனிந்தான். கொஞ்சம் ஏமாந்தாலும் காரியம் கெட்டு விடும் என்றுணர்ந்த அருக் காணி, தனது உயிருக்கும் மேலாக மதித்த கற்புச் செல்வத் தைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து ஆற்றோரம் ஓடினாள். கால் தரையில் படுவது கூடத் தெரியாமல் மிக வேகமாக ஓடக் கூடியது மான் எனினும் குறுக்கே ஓடி அதன் குரல் வளையைப் பிடித்துக் குதறக் கூடிய திறமை வேங்கைப் புலிக்கு உண்டல்லவா; அதுபோலத்தான் ஆற்றோரம் ஓடிக் கொண்டி ருந்த அருக்காணியைப் பிடித்து அனுபவிக்க மாந்தியப்பன் குறுக்கே ஓடினான். இனித் தப்பித்துக் கொள்ள வழியில்லை யென்று கண்ட அருக்காணி, ஆற்றில் குதித்து விட்டாள். ஒரு பெண் பதறிப் போய் ஓடி ஆற்றில் விழுந்ததை ஆற் றோரம் நின்ற சிலர் பார்த்துக் துடித்தனர். பழி தன்னைச் சேராமல் பாதுகாத்துக் கொள்ள மாந்தியப்பன் குதிரையி லேறிப் பறந்து விட்டான். பெரிய ஆபத்திலிருந்தும், விபத்திலிருந்தும் அருக்காணித் தங்கம் தப்பித்துக் கொண்டாள் என்ற மகிழ்ச்சியொருபுறம் தாமரைக்கும் குன்றுடையானுக்கும் இருந்தாலும்கூட செல்லாத் தாக் கவுண்டர் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தைப் பழி வாங்குவதிலும் சீரழிப்பதிலும் இன்னமும் கண்ணுங்கருத்து மாகச் செயல்படுகிறார்களே என்ற வேதனை அதிகரிக்க ஒரு வரையொருவர் பார்த்துக் கொண்டனர். 108 -