உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் 'விரைவில் தயாராகுங்கள் வீரர்களே!" எனக் கட்டளை பிறப்பித்த சின்னமலைக்கொழுந்து: கோட்டை முகப்பின் பீடத்திலிருந்து இறங்குவதற்கு முன்பாக மற்றொரு பிரகடனத் தையும் வெளியிட்டார். அந்தப் பிரகடனத்தை வெளியிடுவ தற்கு முன்பு; அவர் பொன்னரை ஒரு பக்கத்துத் தோளிலும், சங்கரை ஒரு பக்கத்துத் தோளிலும் அணைத்துக் கொண்டார். 16 'இந்தப் படையெடுப்பில் வெற்றி பெற்று - செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சியை முறியடித்து - ராச்சாண்டார் மலை யில் சிறைப்பட்டுள்ள என் குடும்பத்தாரையும் மீட்டு விட்டால்; என் பெண்கள் முத்தாயியை இதோ இந்த இளைஞனுக்கும், பவளாயியை இதோ இந்த இளைஞனுக்கும் வாழ்க்கைத் துணை வியராக ஆக்குவதாக உறுதியளிக்கிறேன்! ராச்சாண்டார் மலை நோக்கிப் புறப்படும் நமது படையின் தளபதிகளாக இவர்களே பொறுப்பு ஏற்பார்கள்!" சின்னமலைக்கொழுந்தின் அறிவிப்பு கேட்டு ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்! 'வீரவேல்! வெற்றி வேல்!" என்ற பேரொலியால் ஆரிச்சம்பட்டி கோட்டையே அதிர்ந்தது. தளபதிக்குரிய படைக்கலன்களை எடுத்துக் கொள்ளவும், உடைகளை அணியவும் பொன்னரும் சங்கரும் வீரமலையுடன் ஆரிச்சம்பட்டி தளவாட அறைக்குள் நுழைந்தனர். நுழைந்த வேகத்திலேயே போர் உடை பூண்டு, உருவிய வாளுடன் வெளிவந்தனர். அவர்கள் வருகைக்காக ஒரு குதிரை மீது சின்னமலைக் கொழுந்து காத்திருந்தார்; காத்திருந்தார்; பொன்னர். சங்கர். வீரமலை மூவருக்குமாகத் தயார் நிலையில் இருந்த குதிரைகள் மீது அவர்களும் தாவிப் பாய்ந்து ஏறி அமர்ந்து கொண்டனர். அணிவகுத்துள்ள வீரர்களைக் 'வீர .. சின்னமலைக்கொழுந்து; கம்பீரமாகப் பார்த்து வாளை உயர்த்திக் கொண்டே வேல்!' என உரிக்கக் கூறினார். "வெற்றி வேல்" வெற்றி வேல்" என பெரு முழுக்கம் இடியொலியென எழுந்தது. ஆரிச்சம்பட்டி கோட் டையை விட்டுப் படை கிளம்பிற்று! தீப்பந்தம் ஏந்தியோர் தியோர் - வாள் ஏந்தியோர் - - வேல் ஏந்தியோர் - ஈட்டி ஏந்தியோர் வில்லம்பு ஏந் குதிரை - களில் அந்த இருட்டில் பாதையில் புழுதியைக் கிளப்பிக் 136