உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி - யுள்ள தோட்டம் துரவு நில புலங்களும் நமது பாசறையும் அதைச் சார்ந்த சோலைகளும் கோளாத்தாக் கவுண்டரால் நமது குடும்பத்துக்கு அந்தக் காலத்திலேயே பரிசாக வழங்கப் பட்டவை! அப்படிப்பட்ட பரந்த மனமும் இனிய சிந்தையுங் கொண்ட ஒரு குடும்பத்தில் வெள்ளையுள்ளம் படைத்த குன் றுடையானின் குழந்தைகளைக் கொண்டு போய்க் கொலைக் கூடமொன்றில் ஒப்படைக்க எனக்கு எப்படி இதயம் இடங் கொடுக்கும்? முடியாது; நிச்சயமாக என்னால் முடியாது! 66 'அப்படியென்றால் இந்தக் குழந்தைகளை தலையூர் மன்ன னிடம் ஒப்படைக்காமல் இருந்து விடப் போகிறீர்களா?" -> ஒப்படைக்காவிட்டால் அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? இந்தக் குழந்தைகளைக் கொண்டு வந்து தரும் பொறுப்பை நானேயல்லவா ஏற்றுக் கொண்டிருக்கிறேன்!" 'கடத்திக் கொண்டு வந்து கொன்று விட்டதாகச் சொல்லி விடுங்களேன். LA > அதை நம்ப முடியாது என்பதால் தானே, குழந்தைகளைத் தலையூரில் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமென்று அப் போதே திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. 3

'இப்படியொரு அநியாயப் பழியைத் தாங்கள் வலுவில் தூக்கி உங்கள் தலையில் போட்டுக் கொண்டிருக்கவே தேவை யில்லை!" 'நான் இந்தக் காரியத்தைச் செய்வதாக ஒத்துக் கொள்ளா விட்டால் - தலையூர் மன்னனின் ஆட்கள் எப்படியும் இந்தக் குழந்தைகளைக் கொன்று விடுவார்கள்." 46 'அவர்கள் கொல்லக் கூடாது; நாமே கொல்வோம் என்று முடிவு எடுத்து விட்டீர்களா?' . . .. அப்படி முடிவெடுத்திருந்தால் உன்னோடு இவ்வளவு நேரம் எதற்காகப் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன்?' .. - 'என்ன சொல்கிறீர்கள்? குழந்தைகளைத் தலையூர் மன்ன னிடம் கொடுக்கவும் வேண்டும் ஆனால் குழந்தைகள் சாக வும் கூடாது என்றால் அது எப்படி முடியும்? தாங்கள் குழந் தைகளைக் கொடுப்பது தலையூரானின் கைகளில் அல்ல; 195