உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திடீர்த் திருமணங்கள்! வேகமாக வீசப்பட்ட கத்திகள் மின்னல் வெட்டுக்கள் நிறைந்த காரிருளைக் கிழித்துக் கொண்டு செல்வது போல மூன்று வெண்புரவிகள் சங்கரமலையை நோக்கிச் சென்று கொண் டி ருந்தன. முதலாவதாகவும் நடுநாயகமாகவும் ராக்கியண்ணன் ஒரு குதிரையில் அமர்ந்திருந்தார். இருபுறமும் இரு குதிரை களில் பொன்னரும் சங்கரும் அவரைப் பின் தொடர்ந்தனர். அந்த இருவர் உள்ளத்திலும் தங்களிருவரிடமும் ராக்கி யண்ணன் கையடித்துப் பெற்றுக் கொண்ட துளுரை நிகழ்ச் சியே சுழன்று கொண்டிருந்தது. தங்களின் ஆசானுக்கு மிஞ்சி எதுவுமில்லையென்கிற அளவுக்கு ராக்கியண்ணனிடம் அவர் களுக்கு முழுமையான அன்பும் பற்றும் இருந்த போதிலும் தங்களை வாழ்க்கைத் துணைவர்களாக அடைந்து இல்வாழ்வு தொடங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கும் முத்தாயி பவளாயி இருவரும் இந்த திடீர் திருப்பமான செய்தி கேட்டால் எப்படி அதிர்ந்து போவார்கள் என எண்ணிக் கவலைப் பட்டார்கள். தன்னிடம் எவ்வளவு நன்றியுணர்வுடன் கூடிய விசுவாசம் வைத்திருந்தால் உயிராக மதிக்கும் காதலிகளை மறந்து திரு மணத்தைத் துறந்து தனது சபதம் நிறைவேறும் வரையில் பிரம் மச்சாரிகளாகவே வாழ்வதாக சத்தியம் செய்து கொடுத்திருப் பார்கள் என எண்ணியவாறு ராக்கியண்ணன் குதிரையில் பறந்து கொண்டிருந்தார். ஆசானைச் சந்திக்கச் சென்றவர்கள் இன்னும் திரும்பி வர வில்லையே; மாயவராவது ஏதாவது செய்தியனுப்பியிருப்பார் அவரிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லையே என்று குன்றுடையானும், தாமரைநாச்சியாரும் வீரமலையிடம் கவ லைப்பட்டுக் கொண்டிருந்தனர். .228