உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தான். ஒற்றன் சென்ற பிறகு செல்லாத்தாக் கவுண்டர் மாந்தியப்பன் இருவரும் தலை யூர்க் காளியின் மூளையைச் சலவை செய்ய ஆரம்பித்தனர். "பொன்னர் - சங்கர் இருவரும் உறையூர் அரண்மனையில் விருந்தினராகத் தங்கியிருக்கும் இந்த அருமையான நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்ச்சியின் சிகர மான அந்த மாயவரும் பொடியன்களுடன் உறையூரில் இருப் பது நமக்கு இரட்டிப்பு வாய்ப்பாகும். சின்னமலைக்கொழுந்து, வையம்பெருமான் இருவருமே ஆரிச்சம்பட்டிக்குச் சென்றிருப் பார்கள். அந்த பயல் வீரமலை மட்டும் தான் வள நாட்டுக் காவல் பொறுப்பை ஏற்றிருப்பான். மற்றபடி அரண்மனையில் தாமரைநாச்சியும் அவளது மருமகள்கள் முத்தாயியும் பவளாயி யும்தான் இருக்கப் போகிறார்கள். அருக்காணித் தங்கத்தை தூக்கிக் கொண்டு வந்து விட இதைக் காட்டிலும் தோதான ஒரு சமயம் நமது தளபதி பராக்கிரமனுக்குக் கிடைக்கப் போவதில்லை. இன்றைக்கே பராக்கிரமனை வள நாட்டுக்குப் போகச் சொல்வது நல்லது" இருவரும் இணைந்து வழங்கிய யோசனையைக் கேட்ட தலையூரான்; பராக்கிரமன்தான் முன்னமே என்னிடம் உத் திரவு பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டானே! இந்நேரம் அவன் வளநாட்டில் இருப்பான்" என்றான்.

அதுதான் இல்லை; பராக்கிரமன் இன்னமும் வளநாடு புறப்படவில்லை. வடிவழகியுடன் இருக்கிறான். 14 நமட்டுச் சிரிப்புடன் மாந்தியப்பன் இப்படியொரு தகவ லைக் கொடுத்ததும் - தலையூரான் சிறிது அயர்ந்து போனான். அது யார் அந்த வடிவழகி? என்று ஆவல் ததும்பக் கேட் டான். தளபதி பராக்கிரமனுக்குத்தான் இதுவரை திருமணமே ஆகவில்லையே; பிறகு எப்படி ஒரு வடிவழகி வந்தாள் என்ற சந்தேகம் தலையூர்க் காளியைக் குழப்பியது! 14 'வடிவழகி, பராக்கிரமனுக்கு மனைவியல்ல - ஆசை நாயகி! சுரங்கத்துக்குள் தங்கம் இருப்பது போல அவள் தளபதி மாளி கைக்குள்ளேயே இருக்கிறாள். என்னைத் தவிர இந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. நான் இப்போது சொல்லிவிட்ட தால் யாரும் தெரிந்ததாகவும் காட்டிக் கொள்ளக்கூடாது. அவளிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் தளபதி பராக்கிரமன் எங்கும் செல்வதில்லை" 313