உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி காலையிலேயே புறப்படுவோம்! இரவு இளவரசி நன்றா கக் களைப்பாறட்டும்!" என்றான் குன்றுடையான்! இளவரசிக்குரிய எந்த வசதிகளும் குறையாமல் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று அரண்மனைப் பணியாட்கள் அனை வருக்கும் குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் பிறப்பித்தார்கள். ஆணை மாலைப் பொழுது அடையாளம் தெரியாமல் மறைந்து, இருளின் ஆதிக்கம் பரவியது வளநாட்டுக் கோட்டையிலும், அரண்மனையிலும்! அரண்மனையில் வழக்கமாகக் கொளுத்தி வைக்கப்படும் தீப்பந்த விளக்குகளும், பெரும் பெரும் அகல் விளக்குகளும் தங்களாலியன்ற ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன! வளநாட்டு அறுசுவை உணவை அளவுக்கு மீறி ஒரு பிடி பிடித்து விட்டேன்! தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது!" என்று வீரமலையிடம் கூறிவிட்டு சோழ நாட்டு மெய்க்காப்பாளன் வாணவராயன், அவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று கட்டிலில் உருண்டு விட்டான். அவனுடன் வந்த வீரர் களும் அவனது அறையைச் சுற்றிப் படுத்துக் கொண்டார்கள். அவர்களில் சில வீரர்களது குறட்டைச் சப்தம் அந்த அரண் மனைச் சுவர்களையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கோட்டைக் காவலர்கள் விழிப்புடன் காவல் புரிகிறார்களா என்பதை அறிய வீரமலை மட்டும் கோட்டைச் சுவர்களிலும் தாழ்வாரங்களிலும் மெல்ல நடைபயின்று கொண்டிருந்தான்.

ஆடம்பரமும் வசதிகளும் நிரம்பிய அறையொன்று ஒதுக்கப் பட்டிருந்தும் கூட இளவரசிக்கு மட்டும் ஏனோ தூக்கம் வர வில்லை. அப்போது "இன்னும் தூங்கவில்லையா?" என்று கேட்டுக் கொண்டே அகிற்புகை எழும் தூபம் ஒன்றை அந்த அறையில் கொண்டு வந்து வைத்தாள் குப்பாயி! "ஏதேதோ நினைவுகள்! இப்போது தான் தூக்கம் கண் களைத் தொட ஆரம்பித்திருக்கிறது!" என்றாள் இளவரசி. - 327