உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி அவன் வருவதைப் பார்த்து விட்ட வாணவராயன், தனது வீரன் ஒருவனின் காதில் அவசர அவசரமாக எதையோ சொல்லிவிட்டு, அங்குள்ள பெருந்தூண்களில் மறைந்து மறைந்து அந்த இடத்தை விட்டு, புயல் போலப் போய் விட்டான். இளவரசியின் அறைக் கதவுக்கு முன்னால் வந்துவிட்ட குன்றுடையானை நோக்கி, அரசே! இந்த அநியாயத்தைப் பாருங்கள்! உங்கள் தளபதி வீரமலை எங்கள் இளவரசியிடம் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார் பாருங்கள்! என்று கதறியவாறு வாணவராயனின் ஆள்; அவனது கால் களைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். . குன்றுடையான், அந்த ஆளின் தோள்களைப் பற்றி நிற்க வைத்து என்ன நடந்தது சொல்!" என்று பதற்றத்துடன் கேட்டான். இனி என்ன நடக்க வேண்டும்? எல்லாம் இளவரசியே சொல்லுவார்! உங்கள் தளபதி வீரமலை இளவரசியின் அறைக் குள் புகுந்து அவரைப் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இளவரசி கூச்சல் போடவே நான் ஓடி வந்து கதவைப் பூட்டி விட்டேன். இல்லா விட்டால் நீங்கள் வருவதற்குள் வீரமலை இங்கிருந்து ஓடி விடுவார் அல்லவா? இப்போது உங்கள் கண் முன்னால் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டார்! என்று அவன் சொல்லிக் கொண்டே கதவில் மாட்டியிருந்த பூட்டை அகற்றினான். குன்றுடையான் கதவை ஓங்கி உதைத்து விட்டு உள்ளே சென்றான், தனது வீரர்களுடன்! அங்கே குன்றுடையான் கண்ட காட்சி அவனை சினத்தின் சிகரத்துக்கே கொண்டு சென்றது. - அரை வீரமலை ஏதோ ஒரு அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந் தான். இளவரசியோ, ஆடைகள் நிலை குலையவும் அவள் அணிந்திருந்த ஆரங்கள் தரையில் சிதறிக் கிடக்கவும் நிர்வாணமாகவும் கட்டிலின் ஓரத்தில் நடுநடுங்கிக் கொண்டி ருந்தாள். குன்றுடையானையும் வீரர்களையும் கண்டவுடன், அவள் பாய்ந்து சென்று படுக்கையிலிருந்த போர்வையொன்றை இழுத்து, தனது நிர்வாணத்தை மறைத்துக் கொண்டாள். தனது அரண்மனைக்கு வந்த இளவரசிக்கு இப்படியொரு மானபங்கமா? இந்தச் செய்தி அறிந்தால் உறையூர்ச் சோழர் 341