உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வீரர்களின் பெருங்கூச்சல் ஒரு பக்கம் அவனது காதைத் துளைத்திட பிறிதோர் பக்கம் இளவரசியின் ரதம் அந்த அரண்மனையை விட்டு மிக வேகமாகப் புறப்பட்டுப் போன ஒலியும் அந்தக் காரிருளில் அதிர்ச்சி தரத்தக்கதாய் இருந்தது. .. குன்றுடையான், தனது வலிமை முழுவதையும் ஒன்று திரட் டிப் பெருங்குரலெடுத்து நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!' என்று ஆவேசமாகக் கத்தினான். பெருமழை. தூறலாகச் சிறுத்தது போல வாட்கள் ஈட்டிகள் மோதிக் கொண்ட ஒலி, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு அமைதி திரும்பிற்று! ஆனால் அந்த அமைதியையும் மீறிக் கொண்டு காயம்பட்ட வீரர்களின் முனகல் ஒலி, விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது. குன்றுடையான் மெய் சோர்ந்த நிலையிலும் கடமையாற்றும் உள்ளத்துடன் தனது காவலர்களுக்கு ஆணை பிறப்பித்தான். தீப்பந்தங்களைக் கொளுத்தி முதலில் வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள் என்பதுதான் அந்த ஆணை! தீப்பந்தங்கள் மளமள வெனச் சில கொளுத்தப்பட்டுத் தூண்களில் பழையபடி வைக் கப்பட்டன. மீண்டும் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு குதிரை யொன்று அரண்மனைக்குள்ளிருந்து கோட்டை முகப்பை நோக்கி ஓடுவது போல் தெரிந்தது. குன்றுடையானும் அவ னைச் சுற்றியிருந்த வீரர்களும் பரபரப்படைந்து அந்தக் குதிரை யைக் கவனித்தனர். யார்? உறையூர் மெய்க்காப்பாளன் வாணவராயனா?' என்று குன்றுடையான் கேட்டான்; அவனது பருத்த உருவத் தைப் பார்த்து விட்டு ஒரு யூகமாக! .. ஆமாம்; வாணவராயனாகத்தான் வந்தேன். ஆனால் இப் போது தலையூர்த் தளபதி பராக்கிரமனாகத் திரும்புகிறேன்! வெறுங்கையோடு திரும்பவில்லை. வந்த வேலையை நானும் வடிவழகியும் வெற்றிகரமாக முடித்து விட்டுத்தான் திரும்பு கிறோம். இதோ என்னுடன் குதிரையில் இருப்பது யார் தெரிகிறதா? தலையூர்த் தளபதி பராக்கிரமன் தந்திரமாகத் தங்களை ஏமாற்றி விட்டான் என்பதைப் புரிந்து கொள்ள குன்றுடைய னுக்கு அதிக நேரமாகவில்லை! 346