உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் னின் அருகிருந்து வாழ்ந்து முடித்த தாமரை நாச்சியாரின் கற்பின் சிறப்பையும் பண்பாட்டுப் பெருமையையும் ஏற்றிப் - போற்றாதார் எவருமேயில்லை. பல தக்காரா? தகவிலரா? என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் என்பதற்கேற்ப வள நாட்டு மாந்தரும் - துக்கம் கேட்ப தற்குப் பெருந்திரளாய்க் கூடிய கொங்குச் சீமையின் பகுதிப் பெரு மக்களும் வெள்ளமாய்ப் பரவிட அந்த வெள் ளத்தின் மீது நீந்தும் படகு போல குன்றுடையானையும் தாமரை நாச்சியாரையும் சுமந்து கொண்டு இறுதி ஊர்வல ரதம் சென்றது. இறுதிச் சடங்குகள் முடிவுற்று மக்கள் வெள்ளம் வற்றிய தைத் தொடர்ந்து வள நாட்டுக் கோட்டைக்குள் ஆழமான அமைதி! கோட்டை அரண்மனையின் உள்மண்டபத்தில் எதிர் காலத் தைப் பற்றிய தீவிர சிந்தனையுடையவராக மாயவர் தனது தாடியைத் தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். பொன்னர், சோகமே உருவாகக் காட்சியளித்ததும் - அண்ணன் வாயிலி ருந்து என்ன ஆணை பிறக்குமென எதிர் பார்த்தவாறு சங்கர், வாளின் உறையை விரல்களால் மெல்லத் தட்டிக் கொண்டி ருந்ததும் வீரமலை தனது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு; தான் செய்துவிட்ட தவறுக்கு எப்படிப் பிராயச் சித்தம் செய்து கொள்வது என்பது போலக் கவலைக்குறி காட்டியதும் ஏதோ ஒரு முடிவெடுக்க வேண்டிய அவசியத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக்கின. 1- முத்தாயி, பவளாயி இருவரும் அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையின் மறைவில் அமர்ந்து கண்கள் கலங்கிட என்ன முடிவு எடுக்கப்பட இருக் கிறது என்பதை ஆவலுடன் எதிர்நோக்கிக கொண்டிருந்தனர். அப்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அங்கே அருக்காணித் தங்கம் திடீரெனத் தோன்றினாள். அவள் அங்கு வந்தது பற்றி யாருக்கும் ஆச்சரியமில்லை. ஆனால் அவள் வந்து நின்ற தோற்றம்தான் அங்கு பெருங் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு போர் வீரனுக்குரிய உடை! கையில் வாள்! கண்களில் கனல்! 14 'அருக்காணீ!' என்று ஒரே சமயத்தில் பொன்னரும் சங்க ரும் அலறிவிட்டார்கள். திரை மழவில் இருந்த முத்தாயி பவளாயி இருவரும் திகைத்துப் போய் வெளி வந்தனர். 358