உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் - சங்கர் தலையூர்க் காளியின் இந்த வீர கர்ச்சனையைத் தொடர்ந்து முரசுகள் அதிர்ந்தன! காளி மன்னன் படைக்கு முன்வரிசை யில் தலைமை வகித்துச் சென்றான். அடுத்த வரிசையில் செல் லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் சங்கரின் வாழ்வை எப்படியும் முடித்து விடுவது என்றும்- அந்தக் காரியத்தைத் தலையூர் மன்னனைக் கொண்டே நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்றும் தங்களுக்குள்ளே மகிழ்ந்தவாறு படை நடத்திச் சென்றனர். - வளநாட்டுக் கோட்டையைச் சுற்றியிருந்த தலையூர்ப் படை, சங்கரின் படையை வழியில் சந்தித்துத் தாக்குவதற்காக மிக வேகமாகப் புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த அருக்காணித் தங்கம், 'அய்யோ! என் அண்ணி யார்கள் என்ன ஆனார்களோ?' எனக் கதறிக்கொண்டே கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் பொருட்படுத்தாமல் கோட்டைக்குள் நுழைந்தபோது அருக்காணியின் தோழி யொருத்தி உடலெங்கும் தீக்காயங்களுடன் எதிரே ஓடி வந்து, "அருக்காணீ! போகாதே! உள்ளே போகாதே!" எனக் கூச்ச லிட்டுக்கொண்டே அருக்காணித் தங்கத்தின் காலடியில் விழுந் தாள். தீக்காயங்களுடன் இருந்த அவளை, அருக்காணி மெல்லத் தூக்கித் தனது மடி மீது அவள் தலையை வைத்துக்கொண்டு, என்னம்மா - என்ன நடந்தது? என் அண்ணியார் இருவரும் எங்கே? தப்பித்து விட்டார்களா? என்று கண்களில் கனலும் புனலும் பொங்கிடக் கேட்டாள்! .. - 'முத்தாயி பவளாயி இருவரும் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ளவும் - பகைவர்களை அவர்களது அந்தப்புரத்து அரண் மனையில் நுழைய விடாமல் தடுக்கவும் அவர்களே அரண் மனைக்குத் தீ வைத்து விட்டார்கள்! நமது கற்கோட்டை அழிந்து விட்டது - அவர்களது கற்புக் கோட்டை காப்பாற்றப்பட்டு விட்டது!இதை நாக் குழறக் கூறிய அருக்காணியின் தோழி, அதற்குமேல் பேசமுடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள்! 16 "அழாதே! இப்போது என் அண்ணியார்கள் எங்கே? நீ இரு; நான் போய்ப்பார்த்து வருகிறேன்!' என்றுரைத்தவாறு அருக்காணித்தங்கம், அந்தத் தோழியை மடியிலிருந்து மெல்லத் தரையில் படுக்க வைத்துவிட்டு அவசர அவசரமாக எழுந்தாள்! எழுந்தவளின் கையை அந்தத் தோழி கெட்டியாகப் பிடித் துக் கொண்டு. 'அருக்காணித் தங்கம்! நீ போய் எந்தப் பயனு மில்லை! போகாதே! என்று கூச்சலிட்டாள். 484